இந்த உலகில் தாய் பாசத்துக்கு ஈடு இணையில்லை. மனிதர்களிடம் மட்டுமே தாய் பாசம் இருக்கிறது என நினைத்துக் கொள்ள வேண்டாம். விலங்குகள் மற்றும் பறவைகளிடம் நீங்கள் தாய் பாசத்தை கண்கூடாக பார்க்கலாம். குஞ்சுகளை கோழிகள் பொத்தி பொத்தி அடைகாக்கும். கழுகு, காகம் உள்ளிட்டவைகளிடம் இருந்து வரும் ஆபத்துகளை தனியாகவே கோழிகள் எதிர்கொண்டு விரட்டுவதை நீங்கள் கிராமங்களில் பார்த்திருக்க வாய்ப்புகள் உண்டு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல், வீட்டில் வளர்க்கும் பூனை மற்றும் நாய்களிடமும் தாய் பாசத்தை பார்க்க முடியும். குட்டிகளை பாதுகாக்கும் நாய்கள், அவற்றின் அருகில் எந்தவொரு மனிதர்களையுமே அனுமதிக்காது. தெரிந்த பழகிய நபர்கள் மட்டுமே நாயின் குட்டிகளை தொட்டுப் பார்க்க அனுமதி கொடுக்கும். மற்றவர்களை அருகே ஒரு அடி கூட நெருங்க அனுமதிக்காது. பறவைகளும் அப்படி தான். காகம் முதல் கிளி வரை என அனைத்து பறவைகளும் தங்களின் குஞ்சுகளை மிகுந்த சிரத்தை எடுத்து பாதுகாக்கும். துளியும் ஆபத்துகளை நேர அனுமதிக்காது. இதேபோன்ற அன்பை நீங்கள் காட்டில் வசிக்கும் விலங்குகளிடமும் பார்க்கலாம். ஈன்ற குட்டிகளை கண்ணும்கருத்துமாக பாதுகாத்து, அவற்றை வளர்க்கும்.



இடையே ஏதேனும் இடர்பாடுகள் வந்தால், அவற்றை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு குட்டிகளை பாதுகாக்கவே விலங்குகள் போராடும். அப்படியான ஒரு தாய் பாசம் காட்டும் வீடியோ தான் இப்போது வைரலாகியிருக்கிறது. சிங்கம் ஒன்று புதிதாக ஈன்ற குட்டிகளை காட்டில் விட்டுவிட்டு தனியாக விளையாட செல்கிறது. அப்போது அந்த கூட்டத்தில் இருக்கும் இன்னொரு சிங்கம் அங்கு இருக்கும் குட்டிகளை காலால் மெதிக்கிறது. இதனை பார்த்த தாய் சிங்கம் அடுத்த நொடியே தான் இருந்த இடத்தில் இருந்து கர்ஜித்துக் கொண்டு ஓடிவந்து குட்டியை தாக்கிய சிங்கத்தை ஓட விடுகிறது. இந்த வீடியோ இப்போது டிவிட்டரில் வைரலாகியிருக்கிறுது. ஏறத்தாழ 3 லட்சம் பார்வைகளை பெற்றிருக்கிறது. தாய் பாசத்துக்கு ஈடு இணையே இல்லை என்பதை இந்த வீடியோ மூலம் உணரலாம் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர். 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ