எலக்ட்ரிக் காரை இப்படியெல்லாம் யூஸ் பண்ணலாமா? அந்த கூத்தை நீங்களே பாருங்க..
Viral Video : சார்ஜ் போடும் எலக்ட்ரிக் காரை, ஒரு கூட்டத்தினர் தங்கள் இஷ்டத்திற்கு பயன்படுத்தியிருக்கும் வீடியாே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Viral Video : இந்தியர்களிடம் இருக்கும் ஒரு நல்ல பழக்கம் எது தெரியுமா? நம் கையில் என்ன விஷயம் கிடைத்தாலும் அதனை வீணாக்க மாட்டோம். பால் பாக்கெட்டில் இருந்து, எப்போதோ எதற்கோ உபயோகித்த பிளாஸ்டிக் கவரில் இருந்து எதையும் நாம் விட்டுவைப்பதில்லை. அதெல்லாம் எதற்காவது ஒரு நாள் உபயோகமாகும் என சேமித்து வைப்பதை பழக்கமாக கொண்டிருப்போம். எதையும் வீணாக்காமல் இருப்பது மிகவும் நல்லதுதான். ஆனால், ஒரு எலக்ட்ரிக் காரை வைத்து இதையெல்லாம் கூட செய்யலாமா என யோசிக்க வைக்கிறது, சமீபத்திய வைரல் வீடியோ ஒன்று.
வைரல் வீடியோ:
தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு எலக்ட்ரிக் காரை வீட்டிற்கு வெளியே பார்க் செய்து வைத்திருக்கின்றனர். இதனை வீடியோ எடுக்கும் நபரும் இங்கு என்ன நடக்கிறது என்பதை விவரித்துக்கொண்டே வருகிறார். இந்த காரை சுற்றி அமர்ந்திருக்கும் பெண்கள், கேரட்டை இந்த காரில் இருந்து எடுக்கும் மின்சார சக்தி மூலம் சீவுகின்றனர். கேரட் அல்வா இனிப்பை செய்வதற்காக இந்த பணிகள் நடைப்பெற்று வரலாம் எனக்கூறப்படுகிறது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இப்படிப்பட்ட காரை உருவாக்க ஒருவர் எவ்வளவு முயற்சி செய்திருக்க வேண்டும். அதை அனைத்தையும் இப்படி யூஸ் பண்றாங்களே..” என்று கூறி வருகின்றனர். இப்போது வரை இந்த வித்தியாசமான வீடியோ 4 லட்சம் வியூஸ்களுக்கு மேல் சென்று பல ஆயிரம் லைக்ஸ்களையும் பெற்றிருக்கிறது.
இன்னொருவர் இந்தியர்களால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என ஒரு கூல் இமோஜியை போட்டு பதிவிட்டிருக்கிறார். இன்னும் சிலர் வித்தியாசமான ஐடியாக்களையும் கொடுக்கின்றனர். மின்சாரம் இல்லாத சமயங்களில், இந்த மின்சாரத்தை எடுத்து இன்வர்டர் ஆக உபயோகித்து கொள்ளலாம் என கூறுகின்றனர்.
மேலும் படிக்க | மணமேடையில் செம அடி வாங்கிய மணமகன்! அடித்து துவைத்த பெண் சொன்ன காரணம்..
மேலும் படிக்க | ரயிலுக்கு அடியில் படுத்தபடி 250 கி.மீ பயணித்த நபர்! காரணம் கேட்டா ஆடிப்போவீங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ