Young Man Travelled 250 Kms Under Train : ஒரு இளம் வயது நபர், மத்திய பிரதேசத்தில் இருக்கும் இதர்சி எனும் இடத்தில் இருந்து ஜபல்பூர் வரை சுமார் 250 கி.மீ ரைல் பெட்டியின் சக்கரத்திலேயே பயணித்திருக்கிறார். அதுவும், அது ஒரு எக்ஸ்பிரஸ் ரயில். இவரை ஜபல்பூர் ரயில் நிலையத்தில் இருக்கும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
வைரல் வீடியோ :
டிசம்பர் 24ஆம் தேதி, அதிக தூரம் கடக்கும் தனபூர் எக்ஸ்பிரஸ் ரயில் அதற்குறிய கடைசி ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில்வே அதிகாரிகள், ஒரு இளைஞர் S4 கோச்சிற்கு கீழே படுத்திருப்பதை பார்த்துள்ளனர். இவரது பாதுகாப்பு கருதி முதலில் லோகாே பைலட்டிற்கு தகவல் கொடுத்து ரயிலை நிறுத்தியிருக்கின்றனர். இதையடுத்து ரயிலும் நின்றிருக்கிறது.
#viralvideo INDIA IS NOT FOR BEGINNERS.
A man traveled 250 KM under a train bogie from Itarsi to Jabalpur in the state of Madhya Pradesh claiming that he has no money in the train. pic.twitter.com/LbFBdYn5Gb
— Yeswanth Reddy (@yeswanth86) December 27, 2024
அந்த கோச்சிற்கு வந்த அதிகாரிகள், ஒருவர் கீழே படுத்திருப்பதை பார்த்திருக்கின்றனர். இவரை பிடித்து விசாரித்ததில் இத்தனை கிலோ மீட்டரும் அவர் இப்படியே பயணித்தது தெரிய வந்திருக்கிறது.
அந்த நபரிடம் அதிகாரிகள் விசாரித்ததில், அவர் டிக்கெட் வாங்குவதற்கு பணம் இல்லாததால் இவ்வாறு பயணித்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் யார், எங்கிருந்து வந்தார் என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
தற்போது இந்த வழக்கு ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் கைக்கு சென்றுள்ளது. அவர்கள் இந்த நபர் குறித்து முழு விவரங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
மேலும் படிக்க | காருக்கு அடியில் மாட்டிக்கொண்ட கன்று! மடக்கிப்பிடித்து காப்பாற்றிய தாய் மாடு..
மேலும் படிக்க | “தம்பி ஓரம் போப்பா..” வழியில் நின்ற நபரை தாேளில் தட்டிய யானை! வைரல் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ