சமூக ஊடகத்தில் ஆச்சரியமான மற்றும் வினோதமான பல சம்பவங்கள் தொடர்பான காட்சிகளையும் காணலாம். நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்க முடியும். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில நேரம் புன்னகைக்க வைக்கின்றன. சில நேரம் யோசிக்க வைக்கின்றன, சில நேரம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில நேரம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. சில நேரம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோக்கள், அதிலும் பாம்புகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலைப்பாம்பு உலகின் மிக ஆபத்தான வேட்டை விலங்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அளவில் மிக பெரியதான இது, தன் இரையை கடித்து திங்காமல் அப்படியே உயிருடன் விழுங்கும். சிறுத்தை, ராட்ச பல்லி, உடும்பு போன்றவற்றையும் மிகவும் திறமையான வேட்டையாடும் ஆபத்தான விலங்குகள் இவை. அப்படி இருக்கும் போது, மான் ஒன்று அதன் பிடியில் சிக்கினால் என்ன ஆகும்.... நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது இல்லையா... ஆம்... சாலை ஒன்றில் மலைப்பாம்பு ஒன்று, மானை சுருட்டி இறுக்கியபடி இருக்கும் வீடியோ (Viral Video) சமீபத்தில் வைரலானது.


மிகவும் சாதுவான விலங்கான மான், மலைப்பாம்பிடன் சிக்கித் தவிப்பதை பார்த்த அந்த வழியாக சென்ற யாரோ ஒரு நபர், வெகு துரத்தில் இருந்து, மலைப்பாம்ப்பை குச்சியினால், தாக்க முயற்சிக்கிறார். அவர் எடுத்த அந்த பலன் கிடைத்ததா என்பதை வீடியோவில் காணலாம். 


வைராலாகும் மலைப்பாம்பின் மான் வேட்டை வீடியோ



நல்ல மனம் கொண்ட வழிப்போக்கர் ஒருவர் எடுத்த முயற்சி வெற்றி அடைந்தது. மான துள்ளி குதித்து ஓடுவதைப் பார்த்து நமது மனமும் லேசாகிறது. மலைப்பாம்பு விடுவித்தவுடன், நிமதி பெருமூச்சுடன் மான் துள்ளி குதித்து உயிர் பிழைத்து ஓடுவதை வீடியோவில் காணலாம்.


மேலும் படிக்க | பைப்பை விழுங்கிய பாம்பு, பக்குவமாய் எடுத்த நபர்: வியப்பூட்டும் வைரல் வீடியோ


பொதுவாக மலைபாம்புகள் நச்சுத்தன்மையற்ற பிரிவிலுள்ள, எடையிலும் பருமனிலும், நீளத்திலும் மிகப் பெரிய அளவிலான பாம்பு வகை ஆகும். இவை பெரும்பாலும் ஆப்பிரிக்க ஆசியக் கண்டங்களிலேயே அதிகம் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் தன் இரையை நெரித்துக் கொன்று அதன் பிறகு அவற்றை அப்படியே உண்ணும்.


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | ஆக்டோபஸிடம் சிக்கிய சுறா.... இணையவாசிகளை பதற வைத்த வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ