Viral Video: முயல் தாவி ஓடுவதை பார்த்திருப்பீங்க; நீந்தி பார்த்திருக்கீங்களா!
வைரல் வீடியோ: வைரலான வீடியோவில் முயல் ஒன்று தண்ணீருக்குள் கூலாக நீந்துவதைக் காணலாம். இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
வைரல் வீடியோ: முயல்கள் பர்ப்பதற்கு அழகானவை. அவை குதித்து ஓடுவதை நாம் அனைவருமே பார்த்திருப்போம், இல்லையா? ஆனால் முயல் நீந்துவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் பார்க்கவில்லை என்றால், இப்போதே அதைக் காணலாம். முயல்களுக்கும் நீச்சல் திறன் உண்டு என்பது பலரும் அறிந்திராத உண்மை. அதனால் தான் இப்படியொரு வீடியோயை பார்த்த பெரும்பாலானோர், ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். எது எப்படியோ அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனால்தான் இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் அந்த வீடியோவைப் பார்த்துள்ளனர். மேலும் இந்த வீடியோவை மக்கள் பகிர்ந்து வருகின்றனர்.
வைரலான வீடியோவில், ஆற்றங்கரையில் முயல் இருப்பதைக் காணலாம். அது திடீரென்று எதிர்பாராத வகையில் தண்ணீருக்குள் செல்கிறது. அதாவது, தண்ணீரைப் பார்த்துக் கொண்டிருந்த முயல் சட்டென்று முன்னோக்கி நகர்ந்து, தண்ணீருக்குள் ஒரே பாய்ச்சல் எடுத்தது. இந்த வீடியோவை பார்க்கும் போது, முயல் நடந்து சொல்வதை விட அழகாக இருக்கிறது. முயல் தண்ணீரில் குதிப்பதை பார்க்கும் போது, அது மூழ்கிவிட்டதாக நீங்கள் நினைக்கலாம், ஆனால் அது கூலாக நீந்த தொடங்குகிறது
வைரலாகும் முயல் வீடியோவைக் கீழே காணலாம்:
முயல் தண்ணீரில் குதித்ததோடு மட்டுமல்லாமல் ஆற்றின் கடந்து செல்ல, அழகாக நீந்துவதைக் காணலாம். கூலாக நீந்திக் கரைக்கு சென்ற உடன் குதிப்பதையும் பார்க்கலாம்.
நீரில் முயல் நீந்திய இந்த வைரல் வீடியோவை ட்விட்டர் கணக்கான Buitengebieden பகிர்ந்துள்ளது. 'முயல்களால் நீந்த முடியும்..' என்ற தலைப்பில் அந்த வீடியோ பகிரப்பட்டது. 17 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோ இணையத்தில் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. வீடியோ இதுவரை 2.8 மில்லியன் பார்வைகள், 105.2k விருப்பங்ககளை பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள்.
மேலும் படிக்க | ஆட்டமா தேரோட்டமா... இது மயிலின் மயக்கும் ஆட்டம்... சொக்க வைக்கும் அற்புத வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ