Viral Video: கதையல்ல நிஜம்... பாட்டிலில் கல்லை போட்டு தாகத்தை தீர்த்துக் கொண்ட காகம்!
Thirsty Crow Video: காகம் ஒன்று பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றில் இருக்கும் தண்ணீரை குடிக்கும் முயன்று முடியாமல் போகவே, தண்ணீரை மேல் மட்டத்துக்கு கொண்டு வர சிறிய கற்களை பாட்டிலுக்குள் போடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகின்றது.
சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயம் நம்மை மிகவும் வியப்பில் ஆஅத்தி விடுகின்றன. அதே சமயம் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. அந்த வகையில் புத்திசாலியான காகம் ஒன்றின் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. சிறு வயதில் நீங்கள் கேட்ட தாகம் தீர்ந்த காக்கா கதை... ஒரு கதை அல்ல நிஜம் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்
சிறுவர் புத்தகங்களில், கிட்டதட்ட அனைவரும் படித்துள்ள மிகவும் பிரபலமான கதை தாகம் தீர்த்துக் கொண்ட காக்கா கதை. அதில் காக்கா ஒன்று மிகவும் தாகத்தோடு தண்ணீரை எல்லா இடங்களிலும் தேடி கொண்டிருக்கும் போது ஒரு பானை அதன் கண்ணில் படும். ஆனால், அதில் தண்ணீர் மிகவும் அடியில் இருக்கும். அதை எப்படியாவது மேலே கொண்டு வருவதற்காக காகம், அருகில் உள்ள கற்களில் ஒன்று ஒன்றாக எடுத்து அந்த பானையில் போடும். அதன் பிறகு தண்ணீர் மேலே வரும். அந்த தண்ணீரை குடித்து தாகத்தை தீர்த்துக் கொள்ளும் காகம். இந்த கதை அனைவரும் அறிந்ததே. இதை இதுவரை அனைவரும் பாட புத்தகத்தில் படித்திருப்போம். கார்டூன் படங்களிலும் நாம் பார்த்திருப்போம். ஆனால், இந்த கதையை தற்போதைய நவீன காகம் நிஜமாக்கி உள்ளது. காகம் மிகவும் புத்திசாலியான பறவை என வல்லுநர்கள் கூறும் நிலையில், இந்த வீடியோ அதனை நிரூபிக்கிறது.
வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:
வைரலாகும் வீடியோவில், தாகம் எடுத்த காகம் ஒன்று, சாலையில் உள்ள ஒரு வாட்டர் பாட்டிலில் நீரை கண்டவுடன், முதலில் அதனை குடிக்க பார்க்கிறது. ஆனால், அதில் தண்ணீர் மட்டம் குறைவாக இருப்பதைக் கண்டு, அதில் சிறு கற்களை போட்டு நீர் அருந்துவதை வீடியோவில் (Viral Video) காணலாம். நாம் பாடப் புத்தகத்தில் உள்ள கதையில் காகம் ஒரு பானைக்குள் கல்லை தூக்கிப் போட்டதால் நீர் மேலே வந்து நிலையில், காகம் தாகத்தை தீர்த்துக் கொண்டது என்று கதை கேட்டிருப்போம் அந்தக் கதை உண்மை தான் என்பதற்கு இந்த வீடியோ போதுமானது எனலாம்.
மேலும் படிக்க | கண்ணாடியை பார்த்து குழம்பிப் போன குரங்குகள்! வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ