கண்ணாடியை பார்த்து குழம்பிப் போன குரங்குகள்! வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ!

கண்ணாடியை பார்த்தால் குரங்குகள் என்ன தான் செய்கின்றன என்பதை அறிந்து கொள்ள பூங்காவில் முதலில் ஒரு பெரிய கண்ணாடியை ஒருவர் வைத்தார். குரங்குகளின் ஒவ்வொரு ரியாக்ஷனையும் படம் பிடிக்கும் வகையில் சிறிது தூரத்தில் கேமரா அமைக்கப்பட்டது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 27, 2023, 02:21 PM IST
  • குரங்குகள் பொதுவாக குழுக்களாக வாழ்கின்றன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
  • குரங்குகள் வீடியோ யூட்யூபில் PraGune என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
கண்ணாடியை பார்த்து குழம்பிப் போன குரங்குகள்! வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ! title=

சமூக ஊடக உலகத்தில் தினம் தினம் வேடிக்கையான வீடியோக்கள் பல பகிரப்படுகின்றன. வேடிக்கையான வீடியோக்களை தினமும் பார்த்து பதிவேற்றும் நபர்களின் எண்ணிக்கையும் ஏராளம். அவற்றில் சில நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைப்பவை. அன்றாட வாழ்க்கையில் மன அழுத்தத்தில் இருந்து தப்பிக்க நினைப்பவர்களுக்கு இது போன்ற வீடியோக்கள் வரப்பிரசாதம். தற்போது இதுபோன்ற ஒரு வேடிக்கையான வீடியோ எல்லா இடங்களிலும் பகிரப்பட்டு வருகிறது. தற்போது வைரலாகும் ஒரு காணொளி குரங்குகள் தொடர்பானது, அதில் அவை கண்ணாடியில் தங்கள் முகத்தை பார்த்து குழப்பி போய் கொடுக்கும் ரியாக்‌ஷன்கள் உங்களுக்கு சிரிப்பை வரவழைக்கும்.

கண்ணாடியை பார்த்தால் குரங்குகள் என்ன தான் செய்கின்றன என்பதை அறிந்து கொள்ள பூங்காவில் முதலில் ஒரு பெரிய கண்ணாடியை ஒருவர் வைத்தார். குரங்குகளின் ஒவ்வொரு ரியாக்ஷனையும் படம் பிடிக்கும் வகையில் சிறிது தூரத்தில் கேமரா அமைக்கப்பட்டது. வீடியோவில் பகிரப்பட்டுள்ள காட்சி மிகவும் வேடிக்கையானதாக இருக்கும். குரங்குகளின் கூட்டம் முதலில் கண்ணாடியின் அருகே சென்றதைக் காணலாம். கூட்டம் இங்கு விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​அருகில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடியில் அவர்களின் பார்வை விழுந்தன. கண்ணாடியில் தன்னைப் பார்த்த குரங்கு சற்று குழப்பம் அடைந்து சத்தம் எழுப்பியவாறே கண்ணாடியின் அருகில் வந்தது. இதில் ஒரு குரங்கு கண்ணாடியையே தாக்கியது. கண்ணாடி கீழே விழுந்து உடைந்து போனது.

உடைந்த கண்ணாடி அகற்றப்பட்டு அங்கே மீண்டும் புதிய கண்ணாடி ஒன்று வைக்கப்பட்டது. சிறிது நேரத்தில் குரங்கு மீண்டும் அங்கு வந்து சேர்ந்தது. குரங்கு மெதுவாக கண்ணாடி முன் சென்றது, ஆனால் தன் முகத்தை பார்த்தவுடன் சற்று குழம்பிப் போனது. கண்ணாடியின் பின்னால் குரங்கு இருக்கிறதா என பார்க்க முயன்றது. சில நொடிகளுக்குப் பிறகு மற்ற குரங்கு அங்கு வந்து தன்னையே பார்த்துக் கொண்டே இருந்தது. இப்போது வேறு சில குரங்குகள் அங்கு வந்து தன் முகத்தைப் பார்த்ததும் ஓடிவிட்டன. இதற்குப் பிறகு வீடியோவில் நடப்பதை பார்த்தால் மிஅக்வும் வேடிக்கையாக இருக்கும். எண்டர்டெயின்மெண்டிற்கு நாங்க கியாரண்டி.

மேலும் படிக்க | Viral Video: பேச மட்டும் இல்லை வித்தையும் தெரியும்... பேப்பரில் இறக்கை செய்து அசத்தும் கிளி!

குரங்கின் வேடிக்கையான வீடியோவை இங்கே காணலாம்:

குரங்குகள் பொதுவாக குழுக்களாக வாழ்கின்றன. ஆனால் சிலர் வீட்டிலும் குரங்குகளை வளர்ப்பதுண்டு. மனிதர்கள் செய்யும் பல செயல்களைச் செய்யும் திறன் கொண்ட விலங்குகளில் குரங்குகளுக்கு எப்போதும் முதலிடம் உள்ளது. குரங்குகள் 20 முதல் 40 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. சில குரங்குகள் இரண்டு வயதிலேயே முதிர்ச்சி அடைந்து விடுகின்றன. இன்னும் சில குரங்குகள் 10 வயதில் முதிர்ச்சி அடைகின்றன. குரங்குகளின் கர்ப்ப காலம் ஐந்தரை மாதங்கள் வரை இருக்கும். இந்த வீடியோ யூட்யூபில் PraGune என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | Viral Video: சிங்கங்களிடம் சிக்கி தவித்த முதலை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!

மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News