Viral Video: அம்மாடி... என்ன வாய்.... இது பேசும் கிளி இல்லை... அரட்டை அடிக்கும் கிளி!

கிளி மிகவும் புத்திசாலி பறவைகளில் ஒன்றாகும். கிளிகளும் மனிதர்களுடன் பேசும்  திறன் கொண்டவை. அப்படி ஒரு கிளி பேசும் வீடியோ... இல்லை இல்லை அரட்டை அடிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 23, 2023, 04:55 PM IST
  • பலர் தங்கள் வீடுகளில் கிளி, மைனா போன்ற பறவைகளை வளர்த்து வருகின்றனர்.
  • பேசும் கிளியின் காணொளி மிகவும் வைரலாகி வருகிறது.
  • மற்ற கிளிகளைப் போல இந்த கிளி சாதாரணமாக சொன்னதை திரும்ப சொல்லவில்லை.
Viral Video: அம்மாடி... என்ன வாய்.... இது பேசும் கிளி இல்லை... அரட்டை அடிக்கும் கிளி! title=

தினமும் சமூக ஊடகங்களில் பல வினோதமான மற்றும் விசித்திரமான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. மக்கள் சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை வீடியோக்களைப் பார்ப்பதில் செலவிடுகிறார்கள். ஒவ்வொரு நாளும், மனதை லேசாக்கும், மன அழுத்தத்தை போக்கும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வருகின்றன. விலங்கு வீடியோக்களில் ஆர்வமுள்ள பலர் உள்ளனர். இதே போல் பறவைகளின் வீடியோவுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும் கிளி மிகவும் புத்திசாலி பறவைகளில் ஒன்றாகும். கிளிகளும் மனிதர்களுடன் பேசும்  திறன் கொண்டவை. அப்படி ஒரு கிளி பேசும் வீடியோ... இல்லை இல்லை அரட்டை அடிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

பலர் தங்கள் வீடுகளில் கிளி, மைனா போன்ற பறவைகளை வளர்த்து வருகின்றனர். இவர்களை சொந்தப் பிள்ளைகளாகவே பார்ப்பவர்கள் ஏராளம். அப்படி ஒரு செல்லப் பிராணி பேசும் கிளியின் காணொளி மிகவும் வைரலாகி வருகிறது. ஆனால் மற்ற கிளிகளைப் போல இந்த கிளி  சாதாரணமாக சொன்னதை திரும்ப சொல்லவில்லை, மம்மி என்று அழைக்கிறது, தேநீர் கேட்கிறது, சண்டையிடுகிறது, கத்துகிறது. வைரல் வீடியோவில், கிளி கூண்டில் கூட இல்லை. ஒரு அறையில் ஸ்டூலில் அமர்ந்திருக்கிறது. ஒரு கிளி சத்தமாக அம்மாவை அழைப்பதும், யாரோ " இதே வருகிறேன்.. சொல்லும்மா" என்று சொல்வதும் கேட்கிறது. குழந்தை தன் தாயை அழைப்பது போல இந்தக் கிளியும் அழைக்கிறது. அப்போது அந்த 2 நிமிட வீடியோவில் கிளி ஏதோ ஏதோ சொல்கிறது.

வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்: 

 

 

மேலும் படிக்க | Viral Video: பேச மட்டும் இல்லை வித்தையும் தெரியும்... பேப்பரில் இறக்கை செய்து அசத்தும் கிளி!

இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி திபன்சு கப்ரா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை ஏற்கனவே 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோ ஏராளமான ரீட்வீட் மற்றும் லைக்குகளை பெற்றுள்ளது. சிலர் கிளியின் இறக்கைகள் பறக்க முடியாமல் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும், சிலர் அன்பினால் கிளி பறக்கவில்லை என்றும் கருத்து தெரிவித்தனர்.

மேலும் படிக்க | Viral Video: சிங்கங்களிடம் சிக்கி தவித்த முதலை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!

மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News