சதுரங்க ஆட்டம் அல்லது செஸ் என்பது மிகவும் சுவாரஸ்யமான, மூளைக்கு அதிக வேலை கொடுக்கும்  விளையாட்டு. சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அது மனிதர்களுக்கு இடையிலான சதுரங்க போட்டி. ஆன்லைன் சதுரங்க போட்டிகளும் மிகவும் பிரபலம். உலகின் சில இடங்களில், ரோபோக்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான செஸ் போட்டிகளும் நடக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், சமீபத்தில் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்த சதுரங்க போட்டியின் போது,  ரோபோவுக்கும் சிறுவன் ஒருவருக்கும் இடையிலான சென்ஸ் போட்டியின் போது, ரோபா தாக்கியதில் ஏழு வயது சிறுவனின் விரல் எலும்பு முறிந்த சம்பவம் மிகவும் வைரலாகி வருகிறது.  ஜூலை 19 அன்று நடந்த மாஸ்கோ செஸ் ஓபன் போட்டியில் இந்த சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் குறித்து ரஷ்யாவின் செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் செர்ஜி ஸ்மாகின் கூறுகையில், ரோபா அதன் மூவ் மேற்கொள்ளும்  தேவையான நேரம் கொடுத்து காத்திருக்காமல்,  சிறுவன் வேகமாக மூவ் மேற்கொண்டதால்,  ரோபோ சிறுவனின் விரலை தாக்கியதாக தெரிவித்தார்.


போட்டியின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரோபோ தனது சதுரங்க காயை நகர்த்துவதற்குள், சிறுவன் தனது சதுரங்க காயை நகர்த்துவதை இது காட்டுகிறது. சில நிமிடங்களுக்குப் பிறகு, ரோபோ அந்த சிறுவனின் கையை அழுத்துவதை வீடியோவில் காணலாம். இருப்பினும், பார்வையாளர்கள் சிறிது நேரத்திற்குப் பிறகு தலையிட்டு குழந்தையை ரோபோ கையின் பிடியில் இருந்து விடுவித்தனர்.


மேலும் படிக்க |  Viral Video: ஆமைக்கு ஆசையாய் ஊட்டி விடும் குரங்கு; இணையவாசிகளை கவர்ந்த க்யூட் வீடியோ


கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்:


 



 


ரோபோவால் தாக்கப்பட்ட ஏழு வயது சிறுவன் கிறிஸ்டோபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மாஸ்கோவில் சிறுவர்கள் பிரிவில் உள்ள 30  திறமையான சதுரங்க சாம்பியன்களில் இவரும் ஒருவர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அவரது விரலில் எலும்பு முறிவு மற்றும் கீறல் ஏற்பட்டது.


திரு ஸ்மாகின் மேலும் கூறுகையில், ஏழு வயது சிறுவன் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதாகவும், ரோபோ விளையாடுவதற்கான முறை வரும்போது தனது சதுரங்க காயை நகர்த்த முயன்றதாகவும் விளக்கினார். இது போன்று முன்பு நடந்ததில்லை என்றும் அவர் கூறினார். சிறுவனுக்கு பெரிய அளவில் காயம் இல்லை எனவும்,  பின்னர் அவர் தொடர்ந்து விளையாடியதாகவும், விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, ஆவணங்களில் கையெழுத்திட்டார் என்றும் கூறினார்.


இதற்கிடையில், குழந்தையின் பெற்றோர் மாஸ்கோ நீதிமன்றத்தில்  வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளனர். ஆனால், சதுரங்க போட்டிகளை நடத்தும் கூட்டமைப்பு பிரச்சனையை சரிசெய்து தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய முயற்சிக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.


மேலும் படிக்க | Viral video: முதன்முதலாக பாதாம் சாப்பிட்ட அணிலின் க்யூட் ரியாக்‌ஷன்


மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ