கடற்கரையில் கடற்சிங்கங்களின் அலப்பறை: அரண்டு ஓடும் மக்கள் வீடியோ வைரல்
Sea Lion Video Viral: காத்து வாங்கப் போனால் கடல் சிங்கம் வந்து பயமுறுத்துதே! பயந்து ஓடும் மக்களின் பதற்றமும், காதலிக்க வந்தால் எங்களை நீங்க பயமுறுத்தாதீங்க, பதறி ஓடும் கடல் சிங்கங்கள்
கடற்கரையில் உல்லாசமாக பொழுதுபோக்க வந்த மக்கள், துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று பயந்து ஓடும் வீடியோ தற்போது டிரெண்டிங்கில் இருக்கிறது.
கடற்சிங்கங்கள் கடலில் இருக்கும் என்பது தெரிந்தாலும், அவை கடற்கரைகளுக்கு வரும் என்று இந்த கடற்கரையில் கூடிய மக்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்பது அவர்களின் மாரதான் ஓட்டத்தில் தெரிகிறது.
இரண்டு பெரிய கடல் சிங்கங்களிடமிருந்து தப்பிக்க, கடற்கரையில் ஜாலியாக இருந்தவர்கள் ஓடிவரும் டிக்டாக் வீடியோ வைரலாகி வருகிறது.
பூமியில் வாழும் ஒரு உயிரினம் தான் மனிதன் என்ற எளிய உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாமல், ஆறாவது அறிவு என்ற ஒரே விஷயத்தால் தனக்கே எல்லாம் உரிமை என்று உரிமை கொண்டாடும் மனிதர்களுக்கு உயிர் பயம் மட்டும் தான் எப்போதும் அச்சத்தைத் தருகிறது.
மேலும் படிக்க | நீச்சல் குளத்தில் VIP எண்ட்ரி கொடுத்து மாஸ் காட்டிய கடல் சிங்கம்
உண்மையில் மனிதன், விலங்குகளுடன் ஒப்பிடும்போது பலவீனமானவன் என்பது உண்மை. அதனால்தான் மில்லியன் கணக்கான ஆண்டுகால பரிணாம வளர்ச்சியானது, விலங்குகளையும் ஆபத்தையும் எதிர்கொள்ள கற்றுக் கொடுத்துள்ளது.
கலிபோர்னியாவில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில் ஜாலியாக கடற்கரையில் கூடியுள்ள மக்கள், கடல் சிங்கங்கள் வருவதைப் பார்த்து, பயந்து ஓடுகின்றனர். அச்சத்தால் அலறும் மக்களின் பதற்றத்தைப் பாருங்கள்
உண்மையில் அந்த விலங்குகளும் மக்களை துரத்திக் கொண்டு ஓடுவது வீடியோவில் நன்றாக பதிவாகியுள்ளது. தூரத்தில் இருந்து பார்க்கும்போது அழகாகத் தெரியும் கடல் சிங்கங்கள், பக்கத்தில் வந்ததும் பேயைக் கண்டதுபோல மக்கள் சிதறி ஓடுகின்றனர்.
அசாதாரண வேகத்தில் மக்களை துரத்திக்கொண்டு ஓடும் கடல்சிங்கங்களை பார்க்க பயமாக இருந்தாலும் உண்மையில் அவை கடிக்காது. ஆனால் திடீரென வேகமாக ஒரு விலங்கு துரத்தினால் பயம் வருவது சகஜம் தானே?
மேலும் படிக்க | Viral Video: அப்பா... என்ன வெயிலு; குடிநீர் தொட்டியில் ஆட்டம் போடும் குரங்குகள்
இந்த டிக்டாக் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த சீசனில் கடல் சிங்கங்கள் வழக்கமாக கடற்கரைக்கு வரும் என்று சீவேர்ல்ட் சான் டியாகோவின் கடல் சிங்க நிபுணர் எரிக் ஓட்ஜென் கூறுகிறார்.
கடல் சிங்கங்களின் இனப்பெருக்கக் காலம் இது. ஆண் கடல் சிங்கங்கள், தங்களுக்கான பெண் கடற்சிங்கங்களை அடைவதற்கு போட்டியிடுகின்றன.
அவை வரும் வழியில் மக்கள் இருப்பதால், அவர்கள் பயந்து ஓடுகின்றனர். உண்மையில், இந்த விலங்குகள் மக்களை தொந்தரவு செய்யவில்லை. தங்கள் கூடலுக்கான ஆசையை, இணைவதற்கான உரிமையை நோக்கி அவை இயல்பாக நடந்துக் கொள்கின்றன என்று ஓட்ஜென் மேலும் கூறினார்.
சமூக ஊடகங்களி வெளியான இந்த வீடியோ 10 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. உயிர் பயத்தால் பதறியோடும் வீடியோவை பார்த்தவர்கள் ரசித்து பகிர்ந்துள்ளதால், இந்த வீடியோ வைரலாகிறது.
மேலும் படிக்க | பந்தா காட்டி பல்வு வாங்கிய பாப்பா: வீடியோ பார்த்தா சிரிக்காம இருக்க முடியாது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR