நாடு முழுவதிலுமே கோடையின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது மனிதர்களை மட்டுமல்லாது விலங்குகளையும் வாட்டின் வருகிறது.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வன விலங்குகள் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கவும் தாகத்தை தீர்க்கவும் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருவது வாடிக்கை.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த பத்மநாபபுரம் பகுதியில் குரங்கு கூட்டம் முகாமிட்டுள்ளது.
மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்... ஆனால்... நடந்தது என்ன..!!
அந்த பகுதியில் உள்ள கவுன்சிலர் ஷிபா என்பவரின் வீட்டு மாடியில் ஏறி அங்கிருந்த குடிநீர் தொட்டியில் புகுந்து ஆனந்தமாக குளியல் போட்டு சேட்டை செய்தன. இதை அவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில் அது மிகவும் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோவை இங்கே காணலாம்:
கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி பல மாநிலங்களில் வெப்ப நிலை 45 டிகிரியை (113 டிகிரி பாரன்ஹீட்) கடந்ததால், கடும் அனல் காற்று வீசியது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதைக் காட்டிலும் அனல் காற்று வீசும் நேரம் அதிகரித்து வருவது கவலை கொள்ள வைப்பதாக காலநிலை மாற்ற நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | Viral Video: ‘முட்டை இட’ கடற்கரைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான கடல் ஆமைகள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR