இணைய உலகம் ஒரு ஆச்சரியமான உலகம். தகவல்களின் களஞ்சியமாக விளங்கும் சமூக ஊடகங்கள், நமக்கு தினமும் ஆச்சரியங்களையும் வியப்பையும் அள்ளித் தருகின்றன. சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்களும் செய்திகளும் புகைப்படங்களும் நமக்கு பல அரிய தகவல்களை அள்ளி வழங்குகின்றன. இங்கே சுவாரஸ்யத்திற்கு குறைவே இருக்காது. அவை சில சமயங்களில் ஆச்சரியத்தை கொடுப்பதாகவும் சில சமயங்களில் அதிர்ச்சியை கொடுப்பதாகவும் அமைந்துவிடுகிறது. அந்த வகையில்,, தற்போது வைரல் ஆகி வரும் கிளி ஒன்றின் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. இந்த வீடியோவை பார்ப்பது நிச்சயம் உங்கள் மனம் நிச்சய மகிழ்ச்சியடையும். அன்றாட வாழ்க்கையின் டென்ஷன்களில் இருந்து விலகி, வாழ்க்கை ரசிக்க இது நல்ல சான்ஸ் எனலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாகமாக இருந்த கிளி  ஒன்று தண்ணீர்  குடிக்கும் வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது. கற்கள் பாறைகள் நிறைந்த இடத்தில், குழாயில் இருந்து  வெகு நேர்த்தியாக தன்ணீரை குடிக்கும் வீடியோ, வேகமாக வைரலாகி வருகிறது. அதில் மிக முக்கியமான நிகழ்வாக, அது குழாயில் இருந்து வரும் தண்ணீரை அழகாக கட்டுப்படுத்தி அதனை விரயம் செய்யாமல் நேர்த்தியாக குடித்து விட்டு, குழாயை மூடுவதை பார்த்து, பலர் கிளையை புகழ்ந்து, வியந்து எழுதியுள்ளனர். இந்த வீடியோவை பகிர்ந்தவரும், இந்த கிளி மனிதர்களை விட மிகவும் ஸ்மார்டாக இருக்கிறது என பாராட்டி பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க | சூயிங்கம் மெல்லும் பழக்கம் இருக்கா... ‘இந்த’ வீடியோவை பார்த்தா இனி தொட மாட்டீங்க!


வைரலாகும் கிளி வீடியோவை இங்கே காணலாம்:




விதைகளும், பழங்களும், கொட்டைகளும், பூக்களும், மொட்டுக்களும் மற்றும் தாவரம் சார்ந்த பிற பொருட்களுமே கிளிகளின் முக்கிய உணவு.  கிளிகள் உலகின் அனைத்து வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கண்டங்களிலும் காணப்படுகின்றன. 


சில நாட்களுக்கு முன் கழுகின் மீன் வேட்டை ஒன்று மிகவும் வைரலாகியது. வைரலாகிய அந்த காணொளியில், கழுகு ஒன்று, தண்ணீரில் சீறிப்பாய்ந்து, மிக அழகாக வேட்டையாடுகிறது. நொடியில் மீனை பிடித்து விடுகிறது. தண்ணீரில் பாய்ந்து வேட்டையாடிய மீனை மிகவும் வலுவாக, தனது அலகுகளால் பிடித்துக் கொள்கிறது. நீரில் வேட்டையாடிய மீனை, நொடி பொழுதில் வானில், மீன் உயிருடன் இருக்கும் போதே, ருசி பார்க்கும் அந்த கழுகின் ஆற்றலை கண்டு இணையவாசிகள் வியந்துள்ளனர். அதனை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.


மேலும் படிக்க | Viral Video: வியக்க வைக்கும் ‘சூப்பர் ஸ்டார் கழுகு’... நீரில் மீன் வேட்டை... நடுவானில் மீன் விருந்து..!!


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ