சூயிங்கம் மெல்லும் பழக்கம் இருக்கா... ‘இந்த’ வீடியோவை பார்த்தா இனி தொட மாட்டீங்க!

பபிள்கம், சூயிங்கம் என்றாலே குழந்தைகள் மட்டுமல்ல இளம் வயதினர் முதல் பெரியவர்களும் இதனிடம் ஈர்க்கப்பட்டுள்ளனர். வாய் புத்துணர்ச்சிக்காக பெரியவர்கள் சூயிங்கம் மெல்லும் பழக்கத்தை கடைபிடிக்கின்றனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 11, 2023, 03:45 PM IST
  • இனிமேல் சூயிங்கம் சாப்பிடுவதா வேண்டாமா என உங்களை நினைக்க வைக்க கூடிய வீடியோ.
  • சூயிங்கம்மில் என்ன சேர்க்கப்படுகிறது?
  • சூயிங்கம் மெல்வது வாய்க்கு சிறந்த பயிற்சியாக இருப்பாதால் தாடைகளை பலப்படுத்துகிறது.
சூயிங்கம் மெல்லும் பழக்கம் இருக்கா... ‘இந்த’ வீடியோவை பார்த்தா இனி தொட மாட்டீங்க! title=

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பயன்படுத்தும் பபுள்கம் அல்லது சூயிங்ககம் என்பது ஒரு மிட்டாய் வகை பசை. இதன் சுவை வாய் ப்ரெஷ்னரை போல இருப்பதால் பலருக்கு இது மிகவும் பிடித்தமான மிட்டாயாக உள்ளது. பபிள் கம், சூயிங்கம் என்றாலே குழந்தைகள் மட்டுமல்ல இளம் வயதினர் முதல் பெரியவர்களும் இதனிடம் ஈர்க்கப்பட்டுள்ளனர். வாய் புத்துணர்ச்சிக்காக பெரியவர்கள் சூயிங்கம் மெல்லும் பழக்கத்தை கடைபிடிக்கின்றனர்.

இருப்பினும், இனிமேல் சூயிங்கம் சாப்பிடுவதா வேண்டாமா என உங்களை நினைக்க வைக்க கூடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராம் பயனரால் பகிரப்பட்ட வீடியோவிப், சூயிங்கில் செம்மறி ஆட்டின் சுரப்பிகளில் இருந்து பெறப்பட்ட பொருள் கலக்கப்பட்டு இருக்கலாம் என்பதை வெளிப்படுத்துகிறது. என்ன அதிர்ச்சியாக உள்ளதா.... மூலப்பொருள் எடுக்கப்பட்ட ஆடுகளின் உடல் பகுதியில் எடுக்கப்படுவதை இந்த வீடியோவில் காணலாம்.  இந்த ரகசிய மூலப்பொருளைப் பற்றி நீங்கள் அறிந்தவுடன், நீங்கள் சூயிங்கம் சாப்பிடுவதை நிறுத்தி விடக் கூடும்.

சூயிங்கம்  மெல்வது வாய்க்கு சிறந்த பயிற்சியாக இருப்பாதால் தாடைகளை பலப்படுத்துகிறது என்று நம்மில் பலர் கேள்விப்பட்டிருக்க கூடும். இரட்டை கன்னம் நீங்க, பற்களுக்கும் தாடைகளுக்கு பயிற்சி என பலர் இதை அதிகம் சாப்பிடுவார்கள். ஆனால் சூயிங்கத்தில் லானோலின் சேர்க்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? லானோலின் என்பது ஆடுகளின் தோலில் உள்ள செபாசியஸ் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் எண்ணெய் போன்ற பொருள்.. இதே சுரப்பிதான் நம் உடலை வியர்க்க வைக்கிறது. இந்த மெழுகுப் பொருள் சூயிங்கம் மென்மையாக்கப் பயன்படுகிறது என்பதே உண்மை." வீடியோவுடன் இணைக்கப்பட்டுள்ள குறிப்பில், "சூயிங்கம்மில் என்ன சேர்க்கப்படுகிறது?" - முழு வீடியோவையும் இங்கே பார்க்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வைரலாகும் சூயிங்கம் வீடியோவை இங்கே காணலாம்:

 

 

சாக்லேட் போல, பபுள்கம் அல்லது சூயிங்கம் நம்மில் பலர் அதிகம் சாப்பிடும் இனிப்பு. பெட்டிக்கடைகளில் இருந்து, ஷாப்பிங் மால்கள் வரை, சில்லறை இல்லை என்றால், பபுள்கம், சாக்லேட் போன்றவற்றை மாற்றுப் பொருளாகக் கொடுப்பார்கள். நாமும் அதனை சந்தோஷமாக வாங்கி வருவோம். ஆனால், இந்த செய்தியை பார்த்த பின்... நிச்சயம் ஒரு முறைக்கு இரு முறை இனி யோசிப்பீர்கள். 

மேலும் படிக்க | இந்த வீடியோவை ஒருமுறை பாருங்கள்.. இனி பானி பூரி வாங்கியே சாப்பிடவே மாட்டீங்க

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.) 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News