Viral Video: அப்படி என்ன தான் சாப்பிட்டீங்க சார்... போதையில் ‘தள்ளாடும்’ அணில்!
சரக்கடித்த பின் ‘குடி’ மகன்கள் போதையின் தள்ளாடுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், போதையினால் தள்ளாடும் அணிலின் வீடியோ உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
இணையத்தில் எண்ணிலடங்கா வீடியோக்கள் அனுதினமும் பகிரப்படுகின்றன. இவை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன, சில சமயம் அதிர்ச்சிகளையும் கொடுக்கின்றன. சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக வலைத்தளங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. அந்த வகையில் தற்போது போதையினால் தள்ளாடும் அணிலின் வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.
சரக்கடித்த பின் ‘குடி’ மகன்கள் போதையின் தள்ளாடுவதைப் பார்த்திருப்பீர்கள். மனிதர்கள் மட்டும் தான் போதையில் தள்ளாடுவார்களா என்ன... விலங்களுக்கும் போதை ஏற்படும். இங்கே நாம் காணும் அணில் புளித்த பேரிக்காயை சாப்பிட்ட பின் தள்லாடுவதைக் காணலாம்.
மேலும் படிக்க | Viral Video: அப்படி என்ன தான் தூக்கமோ... குட்டியை எழுப்ப போராடும் தாய் யானை
வைரலாகும் வீடியோவைக் கீழே காணலாம்
ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், புளிக்கவைக்கப்பட்ட சில பேரிக்காய்களை அணில் சாப்பிடுவதைக் காணலாம். புளித்த பேரிக்காய்களை சாப்பிட்ட பிறகு, அணில் தனது காலில் நிற்க முடியாமல் தள்ளாடுவதையும் சாய்வதையும் காணலாம். "Figen" என்ற பயனரால் பகிரப்பட்ட வீடியோவில், "அணில் புளித்த பேரிக்காய் சாப்பிட்டு தள்ளாடுவதைப் பாருங்கள்" என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பகிரப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 662k பார்வைகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்
மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ