உண்மையான சிங்கப்பெண் இவங்க தாம்பா... மிரட்டும் வைரல் வீடியோ
சிங்கத்தை வேட்டையாடி பார்த்திருப்பீர்கள், கூண்டில் இருந்து பார்த்திருப்பீர்கள் ஆனால் இந்த வைரல் வீடியோவில் வருவதை போன்று நிச்சயம் பார்த்திருக்க மாட்டீர்கள்.
ஒரு பெண் மூன்று சிங்கங்களுடன் நடந்து வரும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. சிங்கத்தை கண்டு அனைவரும் மிகவும் பயந்து நடுங்கும் வேளையில், அந்த வீடியோவில் வரும் பெண், ஏதோ நடைப்பயிற்சி செல்வதை போன்று சிங்கங்களுக்கு பின் நடந்து வருகிறார். அவள் கண்ணில் துளியும் பயமில்லை.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ஜென் என்பவர் பகிர்ந்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு பல சிங்கங்களின் வீடியோக்களால் நிரம்பியுள்ளது. தற்போது வைரலாகும் இந்த வீடியோவில் இருப்பவர் ஜென்தான். இந்த வீடியோ தற்போது 6 மில்லியனுக்கும் அதிகமான வியூஸைப் பெற்றுள்ளது.
இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வரும் நிலையில், உண்மையான சிங்கம் இவர்தான் என்ற ரேஞ்சில் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இவர் உண்மையாகவே ஒரு தெய்வபிறவிதான். அதனால்தான், சிங்கள் அவரை தங்களுடன் நடக்க அனுமதிக்கிறது என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
இருப்பினும் சிலரோ அவரை விமர்சனம் செய்தும் வருகின்றனர். இது ஒரு முட்டாள்தனமான செயல் என்றும் திட்டித்தீர்த்து வருகின்றனர். "மிகவும் தைரியசாலிதான். நீங்கள் ஒரு சிங்கத்தை அடக்க முடியும், ஆனால் அவர்களுக்கு இன்னும் அந்த விலங்கு என உள்ளுணர்வு இருக்கும். ஏனென்றால் அது சிங்கம் மற்றும் அவரது பயிற்சியாளரின் மேஜிக்கிற்கு மயங்கி இருப்பதை போன்றது. எந்த நேரத்திலும் அந்த சிங்கங்கள் மாறலாம். 1 நொடியில் உங்களை அவை பாதியாக கிழித்துவிடும். இது அரை துணிச்சலான பாதி முட்டாள்தனம்" என்று மற்றொரு பயனர் கமெண்ட் செய்துள்ளார்.
மேலும் படிக்க | தவகளையை நாசம் செய்யும் பாம்பு: கிடுகிடுக்க வைக்கும் வைரல் வீடியோ
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ