தற்போதுள்ள சமூக வலைதள காலத்தில் ரீலிஸ் மோகத்தில் அனைவரும் மூழ்கி உள்ளனர். தாங்கள் பதிவிடும் வீடியோக்களுக்கு நிறைய லைக்ஸ், வியூஸ் வர வேண்டும் என்பதற்காக பல வித்தைகளை செய்கின்றனர். இவை பார்ப்பதற்கு கிறுக்கு தனமாக இருந்தாலும் பப்ளிசிட்டிக்காக இதனை செய்கின்றனர். இவற்றை பார்த்து மற்றவர்களும் விசித்திரமான அல்லது மோசமான விஷயங்களை செய்கின்றனர். இந்நிலையில், சமீபத்தில் இன்ஸ்டாவில் வைரல் ஆனா வீடியோ ஒன்றில் ஒரு பெண் காரின் கண்ணாடியை பெரிய கட்டையால் அடித்து நொறுக்கிக்கிறார். இதனை அந்த பகுதியில் இருந்த ஒரு நபர் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். ஏன் எதற்காக, எந்த இடத்தில் இந்த சம்பவம் நடந்து என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | படிக்கட்டில் ஏறிய நபரிடம் வம்பிழுத்த குரங்கு, அப்புறம் என்னாச்சி: வீடியோ வைரல்


வெள்ளை நிறத்தில் பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த காரை ஒரு பெண் பெரிய கட்டையால் அடிப்பதில் இருந்து வீடியோ தொடங்குகிறது. இந்த வீடியோவில், "உங்கள் மனைவி உங்களை உங்கள் காதலியுடன் பார்த்தால்" என்று எழுதப்பட்டு இருந்தது. இதன் மூலம் ஒருவர் மற்றொரு பெண்ணுடன் ஊர் சுற்றும் போது அவரது மனைவியிடம் மாட்டி கொண்டது புரிகிறது. இதனை வெள்ளை நிற உடை அணிந்த மற்றொரு பெண் அந்தச் சம்பவத்தை வீடியோவாக எடுப்பதைக் காணலாம். அந்த பெண் தீவிரமாக கார் கண்ணாடியை உடைக்க முயற்சி செய்கிறார். இருப்பினும் காரை விட்டு யாரும் வெளியே வர வில்லை. 


காரின் உள்ளே இருக்கும் நபரும் எப்படியாவது காரை பின்னால் எடுக்க முயற்சி செய்கிறார், ஆனால் அவரால் எடுக்க முடியவில்லை. அதே நேரத்தில் மற்றொரு இருக்கையில் அமர்ந்து இருந்த பெண்ணும் காரை விட்டு இறங்கவில்லை. ஒரு கட்டத்தில் காரில் இருந்த நபர் கீழே இறங்கி, காருக்கு ஏற்பட்ட சேதத்தை பார்க்கிறார். அப்போது, காருக்குள் இருந்த மற்றொரு பெண்ணும் வெளியே வருகிறார். அந்த சமயத்தில் கணவன் சிரித்த முகத்துடன் அவரது மனைவியை அமைதிப்படுத்த முயற்சி செய்கிறார். காரில் இருந்து இறங்கிய மற்றொரு பெண்ணும் அவரை பார்த்து சிரிக்கிறார்.