வைரல் வீடியோ: ரஸ்க் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் ரஸ்குகளை பேக் செய்யும் போது அங்கு இருந்த ஊழியர் ஒருவர் செய்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஊழியர் ஒரு தட்டில் வைக்கப்பட்டுள்ள ரஸ்களை தனது காலால் மிதித்து அதனை பாக்கெட்டில் அடைக்கும் போது நாக்கால் நக்கி பாக்கெட்டில் அடைத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி (Viral Video) வருகிறது. இந்த விஷயத்தை அவர் வேண்டுமென்றே செய்தார் என்பது அந்த வீடியோவில் தெள்ள தெளிவாகிறது. அந்த வீடியோவில் அந்த ரஸ்க்குகளின் மீது கால்களை வைத்து கொண்டும் அதை காலால் மிதித்து அடுக்குவது தெரிகிறது.


ALSO READ | Viral Video: சீறிப் பாயும் நாகப் பாம்பை தண்ணீர் கேனில் அடைத்த மந்திரவாதி..!!


தற்போது இந்த ஊழியரின் செயலை சமூகவலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மக்கள் நம்பி வாங்கும் உணவுப்பொருளை இவ்விதம் செய்ததற்கு இவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என சமூகவலைதளங்களில் கண்டனக் குரல்கள் ஓங்கி ஒலித்து வருகிறது. அந்த வீடியோ இதோ:\


 



 


முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் பானிபுரி கடை நடத்தும் நபர் வேலை செய்து கொண்டே சிறிய மக்கில் சிறுநீரை பிடித்து பானிபூரியில் புதினா நீரில் கலந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | Viral Video: நடுங்க வைக்கும் வீடியோ; இதயம் பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR