புதுடில்லி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா மற்றும் அவர்களது மகள் வாமிகா கோலி ஆகியோரின் ஒரு அழகான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த ஆண்டு ஜனவரியில் விராட் அனுஷ்காவுக்கு குழந்தை பிறந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"ஒரு குழந்தையின் பிறப்பைப் பார்ப்பது ஒரு மனிதன் அனுபவிக்கக்கூடிய, அதிசயமான, நம்பமுடியாத மற்றும் ஆச்சரியமான அனுபவமாகும். அதைப் பார்த்த பிறகு, பெண்களின் உண்மையான வலிமையையும் தெய்வீகத்தன்மையையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. கடவுள் அவர்களை படைத்த காரணத்தை புரிந்துகொள்ள முடிகிறது. ஆண்களை விட அவர்கள் வலிமையானவர்கள் என்பதே அதற்குக் காரணம். என் வாழ்க்கையின் மிகவும் உறுதியான, இரக்கமுள்ள மற்றும் வலிமையான பெண்ணுக்கும், தனது தாயைப் போல வளரப் போகிற மற்றொரு பெண்ணுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். மேலும் உலகின் அனைத்து அற்புதமான பெண்களுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்" என்று விராட் கோலி (Virat Kohli) புகைப்படத்துடன் எழுதியுள்ளார்.



ALSO READ: எனது கடினமான தருணங்களில் துணையாக உடன் இருந்தார் Virat Kohli: Glenn Maxwell


விராட் மற்றும் அனுஷ்கா (Anushka Sharma) இருவரும் 2013 ஆம் ஆண்டில் ஒரு விளம்பர படப்பிடிப்பின் செட்டில் முதன் முதலாக சந்தித்தனர். அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. சில வருடங்கள் டேட்டிங் செய்தபின், இருவரும் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி இத்தாலியின் அழகிய டஸ்கனியில் திருமணம் செய்து கொண்டனர். அந்த ஆண்டின் மிகவும் பேசப்பட்ட, பிரபலமான திருமணங்களில் விராட்-அனுஷ்கா திருமணமும் ஒன்றாக இருந்தது. திருமணத்தில் அவர்களது குடும்பங்களும் நெருங்கிய நண்பர்களும் பங்கு கொண்டனர்.


இந்த ஆண்டு ஜனவரி 11 ம் தேதி மும்பை மருத்துவமனையில் விராட்-அனுஷ்கா ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. முன்னதாக, தங்கள் குழந்தையை படம் பிடிக்க வேண்டாம் என்றும் தனிப்பட்ட எந்த பரிசுப் பொருளையும் அனுப்ப வேண்டாம் என்றும் விராட்-கோலி ஜோடி பத்திரிகையாளர்களை கேட்டுக்கொண்டது.


ALSO READ: விராட்-அனுஷ்காவிற்கு குழந்தை பிறந்ததற்கு வாழ்த்தி Amul வெளியிட்ட அசத்தல் Pic..!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR