விராட்-அனுஷ்காவிற்கு குழந்தை பிறந்ததற்கு வாழ்த்தி Amul வெளியிட்ட அசத்தல் Pic..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி மற்றும் அவரது மனைவியான நடிகை அனுஷ்கா சர்மாவிற்கும்  இரண்டு நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்த செய்தி வெளியானது.

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 14, 2021, 07:36 PM IST
  • விராட் கோலி சமூக ஊடகத்தில் குழந்தை பிறந்த செய்தியை பகிர்ந்து கொண்டார்.
  • பால் நிறுவனம், டிவிட்டரில் Amul தொடர்பாக பகிர்ந்து கொண்ட படத்திற்கு, பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
  • இந்த படம் வைரலாகி பல இதனை பாராட்டியுள்ளனர்.
விராட்-அனுஷ்காவிற்கு குழந்தை பிறந்ததற்கு வாழ்த்தி Amul வெளியிட்ட அசத்தல் Pic..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி மற்றும் அவரது மனைவியான நடிகை அனுஷ்கா சர்மாவிற்கும்  இரண்டு நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்த செய்தி வெளியானது.

இந்த தகவலை, விரட் கோலி சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்டதை  அடுத்து, வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், புதுமையான விளம்பர வாசகங்களுக்கு பெயர் போன் அமுல் (Amul ) பால் நிறுவனம், டிவிட்டரில் இது தொடர்பாக பகிர்ந்து கொண்ட அனிமேடட் படத்திற்ku, அதில பகிர்ந்து கொண்டுள்ள வாசகத்திற்கும், பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த படத்தில் ,  “Bowled over by this delivery. Welcome it home.” என எழுதப்பட்டுள்ளது

கீழே இணைக்கப்பட்டுள்ள ட்வீட்டில் அதன் படத்தை காணலாம்.

இந்த படம் வைரலாகி பல இதனை பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில், விராட் கோலியும் அனுஷ்காவும் மும்பையில் உள்ள ஊடகத்தினருக்கு  ஒரு வேண்டுகோள் வைத்துள்ளனர்.   "இத்தனை ஆண்டுகளாக எங்கள் மீது அன்பு செலுத்தி ஆதரித்து வருகிர்றீர்கள். அதற்கு நன்றி. இந்த முக்கியமான  தருணத்தை உங்களுடன் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அதே சமயத்தில் பெற்றோர்களாகிய நாங்கள் உங்களிடம் வைக்கும் ஒரு எளிய வேண்டுகோள் வைக்கிறோம். அது என்னவென்றால், எங்கள் குழந்தையின் தனிப்பட்ட வாழ்க்கையையும் ஆரோக்கியத்தையும் நாங்கள் பாதுகாக்க விரும்புகிறோம். அதனால், யாரும் புகைப்படம் எடுக்க வேண்டாம்” என இந்த பிரபல தம்பதியினர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

ALSO READ | விராட்-அனுஷ்காவின் மகளுக்கு பெயர் சூட்டப் போகும் அதிர்ஷ்டக்காரர் யார் தெரியுமா..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News