லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆபாச இணையதளத்தை விளம்பரம் செய்ய முயன்ற இளம்பெண்ணைக் காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்று வரும் உலகக் கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. பரபரப்பாக செல்லும் இந்த போட்டிக்கு இடையில் இளம்பெண் ஒருவர் ஆபாச இணையதளம் ஒன்றின் பெயர் பதிக்கப்பட்ட ஆடையை அணிந்து மைதானத்திற்குள் ஓட முயன்றார்.  



அத்துமீறி நுழைந்த இளம்பெண்னை தடுத்து பிடித்த மைதானக் காவலர்கள் அவரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினார்கள்.  



கடந்த மாதம் மாட்ரிட் நகரில் லிவர்பூல் மற்றும் டோட்டன்ஹோம் அணிகளுக்கிடையே சாம்பியன் லீக் இறுதிப் போட்டி நடைப்பெற்றது. இந்த போட்டியின் போதும், இதே விட்டாலி அன்சென்சார்டு என்ற ஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த, இதே ஆபாச இணையதளம் பெயருடன் கூடிய நீச்சல் உடையுடன் பெண் ஒருவர் மைதானத்தில் ஓடினார். இந்தச் சம்பவம் இணையதளத்திற்கு மிகப் பெரிய விளம்பரமாக அமைந்தது.  


கடந்தமுறை, அந்த ஆபாச இணையதளத்தை இயக்கும் விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கியின் பெண் நண்பர் தான் மைதானத்தில் நீச்சல் உடை உடன் வலம் வந்தார். தற்போது லார்ட்ஸ் மைதானத்தில் அத்துமீறி நுழைய முயன்ற எலொனா, அவரின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


தனது மகனின் ஆபாச இணையதளத்திற்கு விளம்பரம் செய்யும் நோக்கில் அவர் மைதானத்திற்கு  ஓட முயன்றுள்ளார். இதனை விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கி தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்திள்ளார்.