மகாராஷ்ட்டிராவின் நாக்பூரில் பி.எம்.பி. நரேந்திர மோடி படத்தின் போஸ்டரை நிதின் கட்கரி  இன்று வெளியிட்டார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி.எம். நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் மோடி வேடத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ளார். ஓமங்க் குமார் இயக்கி உள்ளார்.


இந்த படத்தை ஏப்ரல் 12ம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டனர். ஆனால் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு ஆதரவு அலையை படம் உருவாக்கும் என்று எதிர்ப்பு கிளம்பியது. படத்தை வெளியிடக் கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளும், ஓய்வு பெற்ற 47 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் புகார் அளித்தனர்.


இதைத்தொடர்ந்து நேரில் விளக்கம் அளிக்கும்படி மோடி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. இதைத்தொடர்ந்து படத்தில் மோடியாக நடித்த விவேக் ஓபராய், தயாரிப்பாளர் சந்தீப் சிங் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி மோடி படத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் காட்சிகள் இல்லை என்று விளக்கம் அளித்தனர்.


இதையொட்டி மே 24 ம் தேதி ‘‘பி.எம். நரேந்திரமோடி’’ படத்தை வெளியிட அதன் தயாரிப்பாளர் சந்தீப்சிங்  தெரிவித்து இருந்தார். 


இந்நிலையில் மகாராஷ்ட்டிராவின் நாக்பூரில் பி.எம்.பி. நரேந்திர மோடி படத்தின் போஸ்டரை நிதின் கட்கரி இன்று வெளியிட்டார். போஸ்டர் வெளியீட்டு விழாவில் மோடியாக நடித்துள்ள பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.