அமித் ஷா வந்து பதில் அளிப்பார் காத்திருங்கள் -இது குஷ்பு Punch!
அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்த போது நரேந்திர மோடி என்ன பேசினார் என்பதை விளக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இதற்கான பதிலை அமித் ஷா அளிப்பார், அதுவரை காத்திருங்கள் என காங்கிரஸ் பிரமுகர் குஷ்பு விமர்சித்துள்ளார்!
அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்த போது நரேந்திர மோடி என்ன பேசினார் என்பதை விளக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இதற்கான பதிலை அமித் ஷா அளிப்பார், அதுவரை காத்திருங்கள் என காங்கிரஸ் பிரமுகர் குஷ்பு விமர்சித்துள்ளார்!
காஷ்மீர் பிரச்னையில் மூன்றாம் நபர் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதுதான் தொடக்கம் முதலே இந்தியாவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஜப்பானில் தன்னை சந்தித்தபோது, காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய விருப்பமா என மோடி தன்னை கேட்டார் என்று தெரிவித்தார்.
மேலும் இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் சேர்ந்து தன்னை மத்தியஸ்தத்திற்கு அழைத்தால் அதற்கு தயாராக இருப்பதாக தாம் தெரிவித்ததாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து பிரதமர் மோடி இதுதொடர்பாக நாடாளுமன்றம் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்கட்சியினர் தொடர்ந்து வளியுறுத்தி வருகின்றனர். எதிர்கட்சியின் அமளியாக் நேற்றைய தினம் 3 முறை மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையில் இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், "காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்து வைக்கும்படி டிரம்ப்பிடம் பிரதமர் மோடி ஒருபோதும் கேட்டுக் கொள்ளவில்லை. பாகிஸ்தான் உடனான பிரச்னைகளை இரு நாடுகளும் தங்களுக்குள் மட்டுமே பேச வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இதனையே மாநிலங்களவையின் குறிப்பிட்டார். எனினும் பிரதமர் மோடி நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்கட்சியின் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ள காங்கிரஸ் பிரபலம் குஷ்பு சுந்தர், "கடந்த 5 ஆண்டு ஆட்சியில் மோடி சந்தித்தது ஒரே ஒரு செய்தியாளர் சந்திப்பு. அதிலும் அவருக்கு பதில் அமித் ஷா தான் செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார். அவ்வாறு இருக்க தற்போது அமெரிக்க அதிபர் பேச்சுக்கு மட்டும் பதில் அளித்து விடுவாரா?... காத்திருங்கள் இதற்கு புதிய நாடகத்துடன் அமித் ஷா வந்து பதில் அளிப்பார்" என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.,