`பில்லா பாண்டி` : தல அஜித்தை பாராட்டி ப்ரோமோ வீடியோ!
நடிகர் அஜித்தை மையமாக வைத்து ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பில்லா பாண்டி படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று டிவிட்டரில் வெளியாகி உள்ளது.
நடிகர் அஜித்தை மையமாக வைத்து ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பில்லா பாண்டி படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று டிவிட்டரில் வெளியாகி உள்ளது.
நடிகர் அஜித்தை மையமாக வைத்து ராஜ் சேதுபதி இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ், இந்துஜா, சாந்தினி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பில்லா பாண்டி’.
இப்படத்தில் அஜித் ரசிகராக நடித்திருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று பிரமாதமாக நடைபெற்றது. இந்த இசை விழாவில் விஸ்வாசம் படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் எம்.எல்ஏ கருணாஸ் மற்றும் படக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
"பில்லா பாண்டி" படம் வரும் தீபாவளிக்கு தான் திரைக்கு வருகிறது. ஆனால் இப்படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த தீபாவளிக்கு நேரடியாக அஜித் படம் வராததால், ஆர்.கே.சுரேஷ் அஜித் ரசிகராக நடித்திருக்கும் "பில்லா பாண்டி" படம் திரைக்கு வருவதால், அஜித் ரசிகர்கள் மகிச்சி அடைந்துள்ளனர். இந்த படத்திற்கு தனிக்கை குழ 'U' சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்நிலையில் தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று டிவிட்டரில் வெளியாகி உள்ளது.