மனிதர்கள் இடர்பாடுகளில் சிக்கிக்கொண்டால் மட்டுமே அவர்களை காப்பாற்ற ஆள் இருப்பார்கள் என நினைப்பது  தவறு, விலங்குகளுக்கும் ஆபத்து வந்தாலும் அதனை காப்பாற்ற சில நல்ல உள்ளங்களும் உண்டு என்பதை  விதமாக தற்போது இணையத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.  இணையத்தில் இதுபோன்ற பல வீடியோக்கள் மனிதத்தன்மையை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்து இருக்கிறது.  கிணற்றுக்குள் தவித்து கிடக்கும் பூனையை ஒருவர் காப்பாற்ற முயற்சிப்பது இணையத்தில் பாராட்டை பெற்று வைரலாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | குதிரை மீது சொகுசாக சவாரி போகும் நாய் குட்டி; இணையத்தை கலக்கும் வீடியோ


இந்த வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில், ஒரு கிணற்றுக்குள் பூனைக்குட்டி ஒன்று விழுந்து கிடக்கிறது, அதனால் மேலே வரமுடியாமல் அந்த கிணற்று நீருக்குள்ளேயே தத்தளித்து கொண்டு இருக்கிறது.  அப்போது ஒரு நபர் பூனைக்குட்டி ஏறும் வகையில் பிளாஸ்டிக் கூடையில் கயிறு ஒன்றை கட்டி அதனை கிணற்றுக்குள் போட்டுவிட்டு, கயிற்றின் முனையை மேலிருந்து தனது கையால் பிடித்துக்கொண்டு இருக்கிறார்.  ஆனால் அந்த பூனைக்குட்டி அந்த பிளாஸ்டிக் கூடையினுள் ஏறாமல் அங்குமிங்குமாக சுற்றிக்கொண்டு இருக்கிறது, அந்த நபரும் பூனைக்குட்டி ஏறுவதற்கு வாகாக கூடையை அங்குமிங்குமாக நகர்த்திக்கொண்டு இருக்கிறார்.  இப்படியே நீண்ட நேரம் அந்த பூனைக்குட்டி கூடைக்குள் ஏறாமல் இருக்க, இறுதியாக கொஞ்ச நேரம் கழித்து ஒருவழியாக அந்த கூடைக்குள் பூனைக்குட்டி ஏறிவிட உடனே அந்த நபர் அந்த கூடையை மேலே தூக்குகிறார்.


 



மேலே தூக்கியதும் அந்த பூனைக்குட்டியை கூடையிலிருந்து அந்த நபர் விடுவித்து விடுகிறார், பூனைக்குட்டி மகிழ்ச்சியாக வெளியே செல்கிறது.  இணையத்தில் இதனை கண்ட நெட்டிசன்கள் பலரும் அந்த நபரை பாராட்டி வருகின்றனர்.  இந்த வீடியோவிற்கு நாற்பத்தி ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளும், பல கமெண்டுகளும் குவிந்து வருகிறது.


மேலும் படிக்க | மனைவியை எழுப்பிய கணவனுக்கு வந்த சோதனை: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ