மனைவியை எழுப்பிய கணவனுக்கு வந்த சோதனை: வைரல் வீடியோ

Funny Viral Video: கணவனை இப்படியா அடிப்பார்கள்? இந்த பெண் இப்படி அடிக்கும் அளவுக்கு அந்த கணவன் செய்த தவறுதான் என்ன? 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 20, 2022, 12:42 PM IST
  • கணவனை அடித்த மனைவி.
  • காரணம் கேட்டால் நம்ப முடியாது.
  • வைரலாகும் வீடியோ.
மனைவியை எழுப்பிய கணவனுக்கு வந்த சோதனை: வைரல் வீடியோ title=

கணவன் மனைவி வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.  தற்போது ஒரு வித்தியாசமான வீடியோ வைரலாகி வருகின்றது. 

மிகவும் வேடிக்கையாக இருக்கும் இந்த வீடியோ பல்வேறு சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோ ஒரு கணவன் மனைவியுடன் தொடர்புடையது போல் தெரிகிறது. இதில் நடப்பதைப் பார்த்து சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியவில்லை. இந்த வீடியோ நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதுவரை மில்லியன் கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.

அடி வாங்கி காணாமல் போன கணவன் 

தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் கணவன் மனைவி இருவரும் படுக்கையில் நிம்மதியாக உறங்குவதை காணமுடிகிறது. துவக்கத்தில் அனைத்தும் அமைதியாகவே தெரிகிறது. அப்போதுதான் கணவன் மனைவியை எழுப்புவதுபோல் தோன்றுகிறது. ஆனால், அதன் பிறகு நடக்கும் விஷயம் கணவனையும் நம்மையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது. 

மேலும் படிக்க | ரோஜா கொடுத்து ப்ரபோஸ் செய்த முதியவர்: இணையத்தை இளக வைத்த வைரல் வீடியோ 

காலையில் மனைவியை எழுப்ப நினைத்த கணவனுக்கு எதிர்பாராத பதில் கிடைத்தது. தன்னை தனது கணவன் சீக்கிரமாக எழுப்புவதைக் கண்ட மனைவி, ஒரு தலையணையைக் கொண்டு முழு பலத்துடன் கணவனை அடிக்கிறார். இதை வீடியோவில் காண முடிகின்றது. இந்தக் காட்சியை வீடியோவில் பார்ப்பதும் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. தலையில் தலையணை விழுந்ததை அடுத்து கணவனால் அசைய கூட முடியாத நிலை ஏற்படுகிறது. 

அடி வாங்கிய கணவனின் வீடியோவை இங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by memes comedy (@ghantaa)

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு தளங்களில் வேகமாகப் பார்க்கப்பட்டு வருகிறது. இது இன்ஸ்டாகிராமிலும் ghantaa என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை ஏகப்பட்ட லைக்குகளையும் வியூஸ்களையும் பெற்றுள்ளது. கணவன்-மனைவி இடையேயான இந்த வேடிக்கையான வீடியோவுக்கு நெட்டிசன்களும் கடுமையாக கமெண்ட் செய்து வருகின்றனர். பலர் செய்யும் கமெண்டுகளை பார்த்தால் அவர்களது சொந்த வாழ்விலும் இப்படிப்பட்ட சம்பவம் நடந்துள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகின்றது.

மேலும் படிக்க | சேட்ட பண்ணிவியா? அம்மாவின் ஒரே அடியில் பம்மிய பூனைக்குட்டி! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News