காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பழங்குடியினருடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்றிருந்தார். அங்கு ராகுலை வரவேற்கும் விதமாக பழங்குடியினரின் நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களும் ராகுல் காந்தி முன் தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடினர். 


 நடனத்தை கண்டதும் உற்சாகமான ராகுல் காந்தியும் நடனக் கலைஞர்களுடன்  கைகோர்த்து நடனமாடினார். ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஆர்.பி.என். சிங் டிரம்ஸ் இசைக்க, ராகுல் காந்தி நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.