துபாயின் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் (Emirates Airlines), கடந்த ஆண்டு உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் எடுக்கப்பட்ட விளம்பரம் மிகவும் வைரலானது நினைவிருக்கலாம். அதன் மற்றொரு பதிப்பை மீண்டும் வெளியிட்டுள்ளது. இந்த முறை A380 விமானத்துடன் கூடவே, ஒரு படி மேலே சென்று அசத்தியுள்ளது. கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 2021 இல் எமிரேட்ஸ் அதன் பிராண்ட் செய்தியை புர்ஜ் கலிபாவின் புதிய உயரத்திற்கு கொண்டு சென்று விளம்பரம் செய்தது பெரிதும் பேசப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எமிரேட்ஸ் வெளியிட்ட புதிய விளம்பரத்தில், நிக்கோல் ஸ்மித்-லுட்விக் (Nicole Smith-Ludvik) என்ற, தொழில்முறை ஸ்கை டைவிங் பயிற்றுவிப்பாளர், எமிரேட்ஸ் குழுவினர் உடையில், புர்ஜ் கலிஃபாவின் உச்சியில் நிற்கிறார். "உலகின் மாபெரும் நிகழ்ச்சிக்கு" என்ற செய்திப் பலகையை அவர் உயர்த்திக் கொண்டிருப்பதைக் காணலாம். எமிரேட்ஸ் A380 இல் உலகின் மிகப் பெரிய நிகழ்ச்சியான எக்ஸ்போ 2020 துபாய்க்கு வருகை தருமாறு அழைக்கிறார்


எமிரேட்ஸ் தனது சமூக ஊடக கணக்கில் இருந்து வெளியிட்ட ஒரு நிமிட வீடியோ மிகவும் வைரலானது (Viral Video). வீடியோவை பார்த்தால் பிரம்மிப்பு ஏற்படும். 


இந்த விளம்பரத்தில் துபாயின் பிரம்மாண்ட கட்டிடங்களின் வான்வழி காட்சிகள் மற்றும் அதன் சின்னமான ஸ்கைலைன் ஆகியவற்றை காணலாம். வீடியோவில், எமிரேட்ஸ் விமானம் பிளக்ஸ் கார்டுடன் நிற்கும் பெண்ணைக் கடந்து விமானம் பறப்பதைக் காணலாம். புர்ஜ் கலீஃபாவின் மேலே, நிற்கும் பெண்மணியை விமானம் கடந்து சென்று பறப்பதைக் காணலாம்.


வீடியோவை இங்கே காணலாம்:


 


 

 

 

 



 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Emirates (@emirates)


 


ஆகஸ்ட் 2021 இல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டபோது, ​​எமிரேட்ஸ் இதே போன்ற ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. தொற்றுநோய்க்கு மத்தியில் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | Viral Video: இது ‘முட்டை’ இடும் பாம்பு அல்ல; ‘குட்டி’ போடும் பாம்பு..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR