புதுடில்லி: சமூக ஊடகங்களில் கேளிக்கை நிறைந்த வீடியோக்கள் வைரல் ஆக அதிக நேரம் எடுக்காது. புகையை உருவாக்கி அதில பல மாயாஜாலங்களை செய்யும் பலரது வீடியோக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது சமூக ஊடகங்களில் 5 விநாடிகளுக்கான அப்படிப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இது மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. இந்த வேடிக்கையான வீடியோவைப் பார்த்தால் நாள் முழுவதும் உங்களை வாட்டி வதைத்த சோகமும் அழுத்தமும் கூட காணாமல் போய்விடும்.


புகை வளையங்களுக்கு இடையில் கிடைத்தது சரியான அடி


ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா ஒரு வீடியோவை சமூக ஊடக தளமான ட்விட்டரில் (Twitter) பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ஒரு கடையில் எடுக்கப்பட்டுள்ளது. இதில், கடைக்காரர் உட்பட 3 பேர் காணப்படுகிறார்கள். இங்கே ஒரு நபர் புகை வளையங்களை உருவாக்குவதாகக் காட்டப்பட்டுள்ளது. கடைக்காரரும் கடையில் இருந்த மற்ற நபரும் அவரை ஆச்சரியமாக கண்களை விரித்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அந்த நபர் கடைக்காரரை அறைந்து விட்டு ஓடிவிடுகிறார்.



ALSO READ: Watch Video: வைரல் ஆன அம்பயரின் ரியாக்ஷன், சலிக்காமல் சிரிக்கும் நெட்டிசன்கள்


வேண்டுமென்றே செய்த தவறு


கடைக்காரரை அறைந்தவுடன் அந்த நபர் ஓடிவிடுகிறார். ஆனால் கடைக்காரருக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர் கடையில் இருந்து பொருட்களை எடுத்து அந்த நபரை நோக்கி வீசுகிறார். ஆனால் அந்த நபர் அந்த இடத்திலிருந்து மிக வேகமாக தப்பித்து விடுகிறார். மிகவும் வேடிக்கையான இந்த வீடியோவின் (Viral Video) தலைப்பில் ரூபின் சர்மா, “இது வேண்டுமென்றே செய்த தவறு. 5 விநாடிகளே கொண்ட இந்த வீடியோவைப் பார்த்து அனைவரும் நன்றாக சிரிக்கலாம்” என எழுதியுள்ளார்.


மக்களுக்கு இந்த வீடியோ மிகவும் பிடித்துப்போனது


சமூக ஊடக (Social Media) பயனர்கள் இந்த வீடியோவை மிகவும் ரசிக்கிறார்கள். இது குறித்து மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் இதை Cool என்றும் சிலர் இதை Epic என்றும் அழைத்து வருகிறார்கள். அவர்களுடைய ரியாக்ஷனைப் பார்த்து, இந்த வீடியோவைப் பார்த்த பிறகு அவர்கள் எப்படி வயிறு குலுங்க சிரித்திருப்பார்கள் என புரிந்துகொள்ள முடிகிறது.


ALSO READ: Viral Video of Legend Saravanan: லெஜண்ட் சரவணன் படத்தின் ஆக்சன் காட்சி படப்பிடிப்பு!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR