Watch Video: வைரல் ஆன அம்பயரின் ரியாக்ஷன், சலிக்காமல் சிரிக்கும் நெட்டிசன்கள்

கராச்சி கிங்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் இடையே நடந்த ஒரு போட்டியின் கடைசி பந்தில், ஆன்-பீல்ட் நடுவர் அலீம் தர் செய்த சில செயல்களால் பலரும் அடக்கமாட்டாமல் சிரிக்கத் தொடங்கினர். பின்னர் இது சமூக ஊடகங்களிலும் வைரலாகியது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 26, 2021, 02:51 PM IST
  • PSL-லில் கராச்சி கிங்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் இடையே ஒரு போட்டி நடைபெற்றது.
  • இதில் நடுவர் அலீம் தரின் ரியாக்ஷன் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
  • இந்த போட்டி நடுவர் அலீம் தரின் அற்புதமான ரியாக்ஷனுக்காக நினைவில் இருக்கும்.
Watch Video: வைரல் ஆன அம்பயரின் ரியாக்ஷன், சலிக்காமல் சிரிக்கும் நெட்டிசன்கள் title=

பாகிஸ்தான்: பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தற்போது பாகிஸ்தானில் நடந்துவருகிறது. இந்த லீக்கில், கராச்சி கிங்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் இடையே ஒரு போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியின் கடைசி பந்தில், ஆன்-பீல்ட் நடுவர் (On filed Umpire) அலீம் தர் செய்த சில செயல்களால் பலரும் அடக்கமாட்டாமல் சிரிக்கத் தொடங்கினர். பின்னர் இது சமூக ஊடகங்களிலும் வைரலாகியது (Viral).

கராச்சி கிங்ஸுக்கு எதிரான இந்த போட்டியில் இஸ்லாமாபாத் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் கடைசி பந்து இஸ்லாமாபாத்தின் பேட்ஸ்மேனின் பேட்களில் பட்டது. அதன் பிறகு கராசி வீரர்கள் அபீல் செய்தனர். நடுவர் அலீம் தர் அவருக்கு நாட் அவுட் அளித்ததால், கராச்சி அணி டி.ஆர்.எஸ். மூலமாக அபீல் செய்தது. டி.ஆர்.எஸ்-சிலும் பேட்ஸ்மேன் நாட் அவுட் என்ற முடிவே அளிக்கப்பட்டது. இதனையடுத்து தான் சொன்ன முடிவையே டி.ஆர்.எஸ்-சும் சொல்லவே அலீம் தர் சந்தோஷத்தால் அளித்த ரியாக்ஷன் அனைவரையும் சிரிக்க வைத்தது.

அலீம் தாரின் இந்த ரியாக்ஷன் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் (Social Media) வைரலாகி வருகிறது.

ALSO READ: Kiss-சால் miss ஆன நாக்கு: முத்தம் கொடுத்து சண்டையை முடித்து விபரீத twist வைத்த Scotland பெண்!!

இந்த போட்டியில் இஸ்லாமாபாத் வென்றது

கராச்சிக்கு எதிரான இந்த போட்டியில் இஸ்லாமாபாத் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் (Cricket Match) முதலில் பேட்டிங் செய்த கராச்சி அணி 20 ஓவர்களில் 196 ரன்கள் எடுத்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக இஸ்லாமாபாத் அணி 5 பந்துகள் மீதமுள்ள நிலையில் இந்த போட்டியில் வென்றது. இஸ்லாமாபாத் சார்பாக அலெக்ஸ் ஹேல்ஸ் 46 ரன்கள் எடுத்தார்.

ஷராஜீல் கானின் சதம் பயனற்று போனது

கராச்சிக்காக ஆடிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷர்ஜீல் கான் ஒரு அற்புதமான சதத்தை அடித்தார். ஷார்ஜீல் 59 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தார். இதில் 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் அடங்கும். இருப்பினும், ஷார்ஜீல் கானின் இந்த சதம் வீணானது. இந்த போட்டியில் அவரது அணி தோல்வியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

ஆனால், இந்த போட்டி நடுவர் அலீம் தரின் அற்புதமான ரியாக்ஷனுக்காக நினைவில் இருக்கும்.

ALSO READ: IND vs ENG 3rd Test: இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News