சித்தோர்கர் மாவட்டம் உஞ்சா கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகனை ஆசிரியர் ஒருவர் திடீரென தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதில் மணமகன் தலைப்பாகை அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக தலையில் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். திடீரென நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசால் விசாரணை நடத்தி திருமணத்தை சுமூகமாக நடத்தி வைத்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க |வெள்ளத்தில் அடித்த செல்லப்பட்ட நாயை மீண்டும் சந்தித்த பெண்! உணர்ச்சிகரமான வீடியோ!


மனமக்களான கிருஷ்ணா மற்றும் மகேந்திரா ஆகியோரது திருமண கொண்டாட்ட நிகழ்வின் போது இந்த சம்பவம் நடைபெற்றதாக  மணமகளின் சகோதரர் போலீசாரிடம் தெரிவித்தார். மணமகனை சரமாரியாக தாக்குவதற்கு முன்னாள் உஞ்சா பகுதியைச் சேர்ந்த சங்கர்லால் பார்தி என்ற நபர்  சாதாரணமாக மேடை ஏறி மணப்பெண்ணுக்கு பரிசு வழங்கினார். பிறகு யாரும் எதிர்பார்க்காத சமையத்தில் மணமகனை தாக்கி உள்ளார். இதனால் சுற்றியுள்ளவர்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் திகைத்து போய் இருந்தனர்.



இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் பரவியது வருகிறது. மணமகனை தாக்கிய சங்கர்லால் உடனடியாக சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினார். பிறகு திருமணத்திற்கு வந்திருந்த பலரும் ஒன்றாக சேர்ந்து அந்த நபரை பிடித்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் கடந்த மே 12ஆம் தேதி ராஜஸ்தானில் நடந்ததாக மணமகளின் சகோதரர் விஷால் சைன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், சங்கர்லால் மற்றும் மணமகள் கிருஷ்ணா ஆகியோர் அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாகப் பணிபுரிந்துள்ளனர். ஒருவேளை இருவருக்கும் காதல் ஏற்பட்டு இருக்கலாம், இல்லை இவர் அந்த பெண்ணை காதலித்து இருக்கலாம். திருமணம் நடைபெற்றதால் பழிவாங்க மணமகனை அடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட சங்கர்லாலை அவரது கூட்டாளிகளுடன் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.


மேலும் படிக்க | நடுரோட்டில் வைத்து தனது மகனின் காதலியை வெளுத்த தாய்! வைரல் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ