நடுரோட்டில் வைத்து தனது மகனின் காதலியை வெளுத்த தாய்! வைரல் வீடியோ!

Viral Video Today: தற்போது வைரலாகி வரும் வீடியோவில், ஒரு பெண் தன் காதலனை ரகசியமாக பார்க்க ஏற்பாடு செய்ய முயன்ற போது அம்மாவிடம் சிக்கி கொள்கிறாள்.   

Written by - RK Spark | Last Updated : May 20, 2024, 06:58 AM IST
  • பெண்ணை நடுரோட்டில் அடிக்கும் தாய்.
  • தனது மகனை பார்க்க சென்றதால் விபரீதம்.
  • வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடுரோட்டில் வைத்து தனது மகனின் காதலியை வெளுத்த தாய்! வைரல் வீடியோ! title=

பல சமயங்களில் இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள் நம்மை மெய்மறந்து பார்க்க வைக்கும். நமது டென்ஷன் மற்றும் இதர விஷயங்களை மறக்க வைக்கும். தற்போது இணையத்தில் பரவி வரும் வீடியோ ஒன்றும் அதே போல பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரலான வீடியோவில் ஒரு பெண் தனது காதலனை பார்க்க ஏற்பாடு செய்ய முயன்ற போது, அவரது தாயிடம் சிக்கி கொள்கிறார். இந்த வைரல் வீடியோ பார்வையாளர்களை குழப்பமடையச் செய்துள்ளது. மேலும் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு தெருவில் தனது ஸ்கூட்டரில் செல்லும் இளம் பெண்ணை, மற்றொரு பெண் கொடூரமாக தாக்குகிறார். 

மேலும் படிக்க | Girl Dance Video: ‘யிம்மி யிம்மி’ இளம்பெண்ணின் வீடியோ.. ஷாக் ஆன நெட்டிசன்கள்

அந்த இளம் பெண் தன் மகனை சந்திக்க ஏற்பாடு செய்தது அவனது அம்மாவிற்கு தெரிய வருகிறது. இதனால் கோபம் அடைந்த அந்த பெண் ரோட்டிலேயே வைத்து தாக்குகிறார். தன்னைத் தற்காத்துக் கொள்ள முயலும் போது அந்த இளம் பெண் குற்றச்சாட்டை பிடிவாதமாக மறுக்கிறாள். இந்த குழப்பத்தின் மத்தியில், வயதான பெண் ஸ்கூட்டரின் சாவியைப் எடுக்க முயற்சி செய்கிறார். இதனுடன் அந்த வீடியோ முடிவடைகிறது. இந்த வைரல் வீடியோவை சமூக ஊடக தளமான Xல் கர் கே காலேஷ் என்பவர் பகிர்ந்துள்ளார். மேலும் தலைப்பில், "ஒரு பெண்ணும் அவளது காதலனின் அம்மாவும் (பெண் தன் காதலனைச் சந்திக்க அழைத்தாள், ஆனால் அதற்குப் பதிலாக அவனுடைய அம்மாவால் பிடிபட்டாள்)" என்று எழுதியுள்ளார்.

இந்த வீடியோ ஆன்லைனில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்தது. கிட்டத்தட்ட 8,75,000 பார்வைகளைக் கடந்துள்ளது. இருப்பினும், சரியான தேதி மற்றும் இடம் உறுதி செய்யப்படவில்லை. இந்த வீடியோவின் கீழ் ஒரு பயனர், "இதனால்தான் இளைஞர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ இந்தியாவை விட்டு வெளியேறுகிறார்கள்," என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர் "கிளாசிக் பெண்கள் சண்டையிடுகிறார்கள். அத்தை பெண்ணின் தலைமுடியை இழுக்கவில்லை என்பதில் மகிழ்ச்சி” என்று எழுதியுள்ளார். "அம்மா தன் மகனை அடிக்கவில்லை, ஆனால் இந்த பெண்ணை அடிக்கிறார்" என்றும், மற்றொருவர் "இன்னும் என்ன நடக்கிறது என்று முயற்சி செய்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் காதலன் கேமராவுக்குப் பின்னால் இருந்திருக்கலாம் என்று சில பயனர்கள் கேலி செய்து வருகின்றனர். சிலர் இந்த வீடியோவை எடுத்ததே அந்த காதலன் தான் என்றும் பதிவிட்டுள்ளார். 

மேலும் படிக்க | போட்டோ எடுத்தது ஒரு குத்தமா!! வெச்சி செஞ்ச மான்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News