இணையத்தில் நாம் அறியாத அல்லது பார்க்காத பல விஷயங்களை பார்க்கலாம். இணைய தளத்தில் பலிரப்படும் சில வீடியோக்கள் மிக விரைவாக வைரலாவதையும் கவனிப்போம். குறிப்பாக சுவாரஸ்யமான காட்டு வாழ்க்கையை பிரதிபலிக்கும் விலங்குகளின் வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. பல வீடியோக்களில் விலங்குகள் இரையை வேட்டையாடுவதையும், அதற்காக அவை என்ன செய்கின்றன என்பதையும் பார்க்கலாம். எனவே நாம் நேரில் பார்க்க முடியாத விஷயங்களை இணையத்தின் மூலம் பார்க்கலாம். சிறுத்தை ஒன்று தனது இரையை பிடிக்கும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 வைரலாகும் இந்த வீடியோ, IFS அதிகாரி சாகேத் படோலா ட்விட்டரில் பகிர்ந்த வீடியோ. சிறுத்தை ஒன்று மானை வேட்டையாடுவதை வீடியோவில் (Viral Video) காணலாம். அந்த காணொளியில் சிறுத்தை மெதுவாக புதரில் இருந்து வெளியே வந்து குதித்து ஓடும் மானை பிடிப்பது தெளிவாக உள்ளது. மான் தப்பி ஓட பெரிதும் முயன்றது. ஆனால் சிறுத்தை அதன் கழுத்தைப் பிடித்து எளிதாக கொன்றது. பார்ப்பவர்களை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தும் வீடியோ இது.


மேலும் படிக்க | Viral Video: என்ன கொடுமை சார் இது... சிங்கங்களை ஓட விரட்டிய எருமை!


வைரலாகும் விடியோவை கீழே காணலாம்:


 



 


ஆச்சர்யமும், அதிர்ச்சியும் ஏற்படுத்தும் வீடியோ சமூக ஊடகங்களின் பல்வேறு தளங்களில் பகிரப்பட்டு ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டது. IFS அதிகாரி சாகேத் படோலா பகிர்ந்த வீடியோவை ஏற்கனவே 75,000 பேர் பார்த்துள்ளனர். பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ 142.6K லைக்குகளையும் பெற்றுள்ளது. வீடியோவின் கால அளவு 14 வினாடிகள் மட்டுமே.


மேலும் படிக்க | புடவையுடன் தாமிரபரணி ஆற்றில் டைவ் அடிக்கும் வீர தமிழச்சி! வைரலாகும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ