ஆவேச உரையாடலுக்கு பின் பிரதமர் மோடியை கட்டியணத்து கைகுலுக்கிய  ராகுல்காந்தி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சுமித்ரா மகாஜன் அனுமதியளித்ததை அடுத்து இன்று மாலை 6 மணிக்கு மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு துவங்குகிறது.    


இதையடுத்து, அனல் பார்க்கும் விவாதங்களுடம் துவங்கியது மக்களவை. ஒவ்வொரு எம்.பி-களும் பேசுவதற்கு நேரம் கொடுக்கபட்டிருந்தது. இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் காங்கிரஸ் பேசும்போது பூகம்பமே கிளம்பும் என்று கிண்டல் செய்திருந்தனர். இதையடுத்து, காங்கிரசஸ் தலைவர் ராகுல்காந்தி பாஜக-வை விமர்சித்து பேசத்துவங்கினார்.  


அவர் பேசுகையில், அமித்ஷா மகன் ஜெய் ஷா விவகாரத்தில் மத்திய அரசு மெளனம் காப்பது ஏன்?. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரதமர் மோடி ஏமாற்றம் மட்டுமே அளித்துள்ளார். ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளார் மோடி. 


விவசாயிகளும், இளைஞர்களும் மத்திய அரசின் பொய் வாக்குறுதிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ராகுல்காந்தி பாஜக மீது சரமாரி விமர்சனம். ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் மூலம் மோடியின் நண்பர் பலனடைந்துள்ளார். என் கண்ணைப்பார்த்து பிரதமர் பேசவேண்டும்; ஆனால் அதை தவிர்க்கிறார். பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது. பாதுகாப்பு அமைச்சர் உண்மையை வெளிப்படையாக விளக்க வேண்டும் என ஆவேச கேள்விகளுடன் ராகுல்காந்தி பேசினார். 


மேலும், பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் மட்டுமே அனைத்து அதிகாரங்களும் உள்ளன. அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்படாததால் அமைச்சர்கள் எதுவும் பேச முடியவில்லை. நான் நன்றாகப் பேசுவதாக பாஜக எம்பிக்கள் சற்றுமுன் என்னிடம் கூறினர். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் வித்தியாசமான அரசியல்வாதிகள். மக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் போது, பிரதமர் மெளனம் காக்கிறார் ஏன்? என்று கேள்வி எழுப்பினார். 


இதையடுத்து, அவர் பிரதமர் எண்ணெய் பார்த்து என கண்ணை பார்த்து பேசவேண்டும் என்றும் அவர் கூறி இருந்தார். இதை தொடர்ந்து, ராகுல்காந்தி பிரதமர் இருக்கும் இடத்திற்கு வந்து பிரதமரை கட்டியணைத்துவிட்டு, கைக்குலுக்கிவிட்டு சென்றார். 



இந்த செயல் அங்கிருந்த அனைவரையும் அதிர்சிக்குள்ளகியது.