தமிழ், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற ராஷ்மிகா, தமிழில் சுல்தான் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் வசூல் சாதனை படைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல் ராஷ்மிகா மந்தனா ஃபிட்னஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர். தனது உடலை எப்போதும் சிக்கென மெயிண்டன் செய்து வருகிறார். இவர் அவ்வப்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் பயிற்சி செய்யும் வீடிஒவை பகிர்த்து வருகிறார். இந்த வீடியோக்கள் அவ்வப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வந்தது.


மேலும் படிக்க | கொடிய நாகப்பாம்பை கூலாக காப்பாற்றிய நபர்: இணையத்தில் வைரல் ஆன வீடியோ 


அந்த வகையில் தற்போதும் அவர் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் பகிர்த்து உள்ளார். இந்த வீடியோ வழக்கம் போல் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கார்டியோ, ஸ்குவாட்ஸ், லோ கிக்ஸ், துள்ளுதல் உள்ளிட்ட பயிற்சிகளை அவர் மேற்கொள்கிறார். அவர் வொர்க் அவுட் செய்த இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், பாசிட்டிவ் காமெண்ட் செய்து வருகின்றனர்.


 



 


இதற்கிடையில் நடிகை ராஷ்மிகா பாலிவுட்டில் சித்தார்த் மல்ஹோத்ரா வுடன் மிஷன் மஜ்னு படத்தில் அறிமுகமாக உள்ளார். இந்தப்படம் ஜூன் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதை தவிர இவர் பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சனின் குட்பாய்  படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | நாகப்பாம்பை உயிருடன் விழுங்கும் ராட்சஸ பாம்பு; மனதை உலுக்கும் வைரல் வீடியோ..!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR