ஃபஹத் ஃபாசில், சாய் பல்லவி நடித்துள்ள அதிரன் என்கிற மலையாளப் படத்தின் டீசர் வெளியீடு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஹத் பாசில், சாய்பல்லவி நடிப்பில் மலையாளத்தில் தயாராகி வருகிறது அதிரன். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ரஞ்சித் பணிக்கர், அதுல் குல்கர்னி, சாந்தி கிருஷ்ணா நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசை அமைக்கிறார், விவேக் இயக்குகிறார். படத்தில் நடித்திருப்பவர்கள் பெரும்பாலும் தமிழுக்கு நன்கு அறிமுகமானவர்கள். 


இந்த நிலையில் கிட்டதட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மலையாள சினிமாவுக்கு திரும்பியுள்ள சாய்பல்லவி, கதாநாயகியாக நடித்து வரும் அதிரன் படத்தில் அவரது தந்தையாக ஜெய நாராயண வர்மா என்கிற கேரக்டரில் நடிக்கிறார் ரஞ்சி பணிக்கர். பிரேமம், கலி படத்துக்குப் பிறகு சாய் பல்லவி நடித்துள்ள மூன்றாவது படம் இது.



ஜிப்ரான் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். இது ஒரு பிசிக்காலஜிக்கல் திரில்லர் படம். ஊட்டி தான் கதைகளம். இதனால் படத்தை தமிழிலும் வெளியிடுகிறார்கள். அதோடு தெலுங்கிலும் வெளியிடுகிறார்கள். இப்படம் அடுத்த மாதம் வெளிவருகிறது.