Viral Video: மயிலை இரையாக்க துடிக்கும் புலி... திக் திக் நிமிடங்கள்!
காட்டில் உள்ள விலங்கு வாழ்க்கை தினசரி சவால்களால் நிரம்பியுள்ளது. வேட்டையாட துடிக்கும் விலங்குகளிடம் இரையாகாமல் தங்களை காத்துக் கொள்ள தினமும் சில விலங்குகள் போராட வேண்டியிருக்கும்.
காட்டில் உள்ள விலங்கு வாழ்க்கை தினசரி சவால்களால் நிரம்பியுள்ளது. வேட்டையாட துடிக்கும் விலங்குகளிடம் இரையாகாமல் தங்களை காத்துக் கொள்ள தினமும் சில விலங்குகள் போராட வேண்டியிருக்கும். சில சமயங்களில் வலிமையான இரு விலங்குகள் கூட மோதிக் கொள்ளும். அதை பார்க்கவே பயங்கரமானதாக இருக்கும். வல்லவன் வாழ்வான் என்ற கூற்று, காட்டு வாழ்க்கைக்கு சிறப்பாக பொருந்தும். ஆனால், சில சமயங்களில், வலிமையான விலங்கை தனது சாதுர்யத்தினால், எளிய விலங்குகள் எளிதில் ஏமாற்றி தப்பித்து விடும்.
வன விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. சில பார்ப்பவர்களுக்கு பீதியை ஊட்டுவதாகவும், சில வேடிக்கையானதாகவும், சில வியப்பில் ஆழ்த்துபவையாகவும் இருக்கும். வனவிலங்கு வீடியோக்களைப் பொறுத்தவரை, அவற்றில் பெரும்பாலானவை வேட்டையாடும் காட்சிகள். வீடியோவில், புலிகள் மற்றும் சிங்கங்கள் மற்ற விலங்குகளைத் தாக்க முயல்வதையும், இரையாக்க துடிப்பதையும் காணலாம். சில சமயங்களில் இரையாக்குவதில் வெற்றி பெறும். சில சமயங்களில் தோல்வியை சந்திக்கும்.
மேலும் படிக்க |Viral Video: ‘ஃபேஷன் ஷோவிற்கு’ தயாராகும் காகம்; சொக்க வைக்கும் ஒய்யார நடை!
தற்போது புலி மற்றும் மயில் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. காட்டில் புலி மிகவும் ஆபத்தான விலங்காக கருதப்படுகிறது. வேட்டையாடுவதை பொறுத்தவரை, புலியின் கையில் சிக்கிய விலங்கு தப்பிப்பது மிகவும் கடினம். இந்நிலையில், மயிலை தாக்க புலி வருவதும், அடுத்து என்ன நடக்கிறது என்பதையும் வீடியோவில் காணலாம். இரண்டு மயில்கள் அருகருகே நிற்பதை வீடியோவில் காணலாம். ஆனால் புலி தன் சிறகுகளை விரித்துக் கொண்டிருக்கும் மயிலை நோக்கி பாய்கிறது. ஆனால் புலி பாய்ந்த நிலையில், மயில்கள் பறந்து தப்பின.
வைரலாகும் புலி - மான் வீடியோவை கீழே காணலாம்:
ஒரு கணம் தாமதித்திருந்தால் மயில் புலியிடம் சிக்கியிருக்கும். புலியின் சத்தம் கேட்டவுடன் மயில்கள் பறந்து புலியின் பிடியில் இருந்து தப்பின. சில வினாடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோ, animals_powers என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. பலராலும் லைக் செய்யப்பட்ட இந்த காணொளிக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் தேசிய விலங்கு அதன் தேசிய பறவையை வேட்டையாடுகிறது என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க |Viral Video: நாய்க்குட்டியை கட்டி அணைக்கும் பூனை; இணையத்தை கலக்கும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ