Viral Video: தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவை நீங்கள் பார்த்தால், இந்த நவீன காலத்தில் மனிதர்களிடம் உள்ள நற்குணம். மனிதநேயம் முற்றிலும் மறைந்து வருகிறது எனத் தோன்றும். இவர்களுக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லையா எனக் கேட்ட தோணும். அதேநேரத்தில் உங்களுக்கு ஆத்திரமும் வரும். அறிவியல், தொழில் நுட்பம் என உலகம் எவ்வளவு முன்னோக்கி சென்றாலும், மனித விழுமியங்களைப் பின்பற்றுவதில் மிகக் கீழான நிலைக்குத் தள்ளப்படுகிறார். ஆசை பேராசை மனிதனை எவ்வளவு மனிதாபிமானமற்ற செயல்களையும் செய்ய வைக்கிறது. இந்தப் பிரதேசத்தை முழுமையாகக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது. தரணியில் மனிதர்களைத் தவிர வேறு எந்த உயிரினமும் வாழத் தகுதியில்லை என்பது போல சிலர் நடத்துக் கொள்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை நீங்கள் பார்த்தால் உங்களுக்கும் கோபம் வரும். மரத்தில் நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பல பறவைகள் இரக்கமின்றி கொல்லப்பட்டன. பலருக்கு நிழல் தரும் மரம் இரக்கமின்றி நொடியில் வெட்டப்பட்டது.


அந்த வீடியோவில், பல பறவைகளின் வசிப்பிடமாக இருந்த ஒரு பெரிய மரத்தை சில நொடிகளில் சிலர் ஜேசிபி மூலம் வெட்டி வீழ்த்தி உள்ளனர். ஆனால் மரம் வெட்டப்பட்டபோது அதில் பல பறவைகள் இருந்தன. ரத்தில் கூடுகட்டித் தங்கியிருந்தபோதே மரம் விழுந்ததால்... அதில் இருந்த பறவைகள்  மரத்தோடு சாய்ந்து சாலையில் விழுந்து காயமடைந்து உயிரை இழந்தன. அதுவரை சுதந்திரமாக இருந்த பறவைகள்.. கண் இமைக்கும் நேரத்தில் மனிதாபிமானமற்ற மனிதர்களால் நூற்றுக்கணக்கான பறவைகளின் உயிர் பறிபோனது. 


மேலும் படிக்க: இது பாம்பு தாம்மா! இப்படி பயமில்லாம போறியே? காலைச் சுற்றிய பாம்பு வீடியோ வைரல்



ஐஎஃப்எஸ் அதிகாரி பிரவீன் கஸ்வான் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அனைவருக்கும் வீடு வேண்டும். ஆனால் நாங்கள் எவ்வளவு கொடூரமாக மாறுகிறோம்" எனக்கூறி வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலுக்கு சுற்றுசூழலியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.


இந்த சம்பவம் கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்துக்குட்பட்ட வி.கே. பாடி என்னும் ஊரில் அரங்கேறியுள்ளது. சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருவதால், சாலையோரத்தில் உள்ள மரங்களை அகற்றி வருகின்றனர். அப்பொழுது தான் பறவைகள் தங்கிருந்த மரத்தையும் வேரோடு சாய்த்துள்ளனர்.


மேலும் படிக்க: ராட்சத சிலந்திகளுடன் அசால்டாய் விளையாடும் சிறுமி: ஷாக் ஆன நெட்டிசன்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ