கோவிட் என்ற வார்த்தையை கேட்டாலே அச்சப்படும் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலகட்டத்தில் பீதியில் உறைந்து போன மக்கள் தற்போது கொரோனா என்ற வார்த்தையை இயல்பாக எடுத்துக் கொள்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிலும், கோவிட் நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது மக்களின் ஆசுவாசத்தை அதிகரித்துவிட்டது. அதை உணர்த்தும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகிறது. பார்த்தவர் பரவசப்படும் அழகிய கலை வடிவம் கொடுத்திருப்பவர் ஒரு செவிலியர் என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.


நோயாளிகளுக்கு இதத்தை கொடுக்கும் செவிலியர், பார்ப்பவர்களை பரவசப்படுத்தும் கலைப் படைப்பை உருவாக்கியிருக்கிறார். சரவிளக்காக விரியும் அவரது கலைபடைப்பு, ஒளி தரும் சரவிளக்காக மிளிர்கிறது. 


பயன்படுத்திய கோவிட் தடுப்பூசி குப்பிகளைக் கொண்டு ஒரு அழகான சரவிளக்கை உருவாக்கி சாதனை படைத்துள்ளார் இந்த நர்ஸ்.  




COVID-19 தொற்றுநோய் உலகை தாக்கியதிலிருந்து, சுகாதாரப் பணியாளர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன் களப் பணியாளர்களாக இடைவிடாமல் பணியாற்றி வருகின்றனர். அதில் ஒருவர் தனது படைப்பாற்றல் மூலம் நெட்டிசன்களை நெகிழச் செய்துள்ளார். 


அமெரிக்காவைச் சேர்ந்த லாரா வெயிஸ் ஒரு செவிலியர், இவர் கொலராடோவில் ஒரு பொது சுகாதார மையத்தில் பணிபுரிகிறார். சமீபத்தில் கோவிட் தடுப்பூசியின் வெற்று குப்பிகளைப் பயன்படுத்தி ஒரு அழகான சரவிளக்கை உருவாக்கினார், இது உலகெங்கிலும் உள்ள மக்களை கவர்ந்தது. போல்டர் கவுண்டி பொது சுகாதாரத்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம், இந்தப் பதிவை பகிர்ந்துள்ளது. 


நூற்றுக்கணக்கான மாடர்னா தடுப்பூசிகளின் வெற்றுக் குப்பிகளைப் பயன்படுத்தி, லாரா வெயிஸ் அழகான சரவிளக்கை உருவாக்கியுள்ளார். இந்த சரவிளக்குப் பதிவு, பேஸ்புக்கில் பகிரப்பட்டது. அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் இந்த கலை படைப்பின் பதிவு விரைவில் வைரலானது.


Also Read | ஹிஜாப் அணியாத பெண்கள் 'நறுக்கிய முலாம்பழம்' 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR