சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் மக்கள் ஒன்றாக இணைந்து யோகா பயிற்சி செய்து வருகின்றனர். தியானத்தில் அமர்ந்து மனதை அமைதி  படுத்தி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தியான வழிமுறையில், உடல்-மனம் ஆகியவற்றிற்கு ஒருங்கிணைந்த பயிற்சியளிப்பதன் மூலம் மன ரீதியான நோய்கள் வராமல் மூளையைப் பாதுகாக்க முடியும். மனம் நிறைந்த தியானப் பயிற்சி நமது உணர்ச்சிகள் மற்றும் மனநிலையை மேம்படுத்த உதவுவதால், நம்மால் இரவில் நிம்மதியாகத் தூங்க முடிகிறது.


தினமும் 30 நிமிடங்கள் தியான நிலையில் மனதை வைத்திருந்தால் கிடைக்கும் பலன்கள் எண்ணிலடங்காதவை. இத்தகைய தியானத்தை முறையாகப் பயிலவும், பின்பற்றவும் செய்தால் வாழ்க்கை ஒரு அமைதியான பயணமாகவே இருக்கும். நமது பாரம்பரியத்துடன் கலந்திருக்கும் தியானம் தான் அந்த அமைதியை மீட்டுத் தரும் அருமருந்தாகவும் அமைகிறது. 


எனவே, இன்றைய நாளில் யோகா பயிற்சி ஈடுபட்டும் பிரபலங்களின் புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை பார்க்க!