கொஞ்சம் அழகா இருந்தா இப்டிதான் ஃபாலோ பண்ணுவானுங்களோ... பூனையின் க்யூட் வீடியோ!
பூனைக்குட்டி ஒன்று நடந்து சென்றுகொண்டிருக்கையில், அதனை உளவு பார்க்க வருவது போல இரண்டு வாத்துக்கள் பின்னாலயே பாலோ செய்து வரும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் தினம் தினம் நம்மை மகிழ்விக்கும் பொருட்டு பல அழகான சம்பவங்கள் பகிரப்பட்டு வருகின்றன, சில நிகழ்வுகள் நமக்கு பிடித்தமானதாக இல்லையென்றாலும், பல நிகழ்வுகள் நமது ஃபேவரைட் லிஸ்டில் இடம்பிடித்துவிடுகின்றன. அன்றைய நாள் நமக்கு எவ்வளவு சிக்கலான நாளாக அமைந்தாலும் சரி, கவலைகள் நிரம்பிய நாளாக அமைந்திருந்தாலும் சரி இணையத்தில் நிரம்பியுள்ள சில விஷயங்களை நாம் கொஞ்ச நேரம் பார்க்கும்பொழுது நமது மனது சற்று நேரத்தில் உற்சாகமாகிவிடுகிறது. பெரும்பாலும் பல இணையாவசிகளால் ரசிக்கப்படுவது விலங்குகளின் சேட்டை, கோமாளித்தனங்கள் தான். தற்போது ஒரு பூனையும், இரண்டு வாத்துக்களும் இடம்பெற்றுள்ள ஒரு வீடியோ இணையத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தி வருகிறது.
வழக்கம்போல அந்த அற்புதமான வீடியோவும் ட்விட்டர் பக்கத்தில் தான் பகிரப்பட்டு இருக்கின்றது, யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில் கருஞ்சாம்பல் மற்றும் வெண்மை நிறம் கலந்த பூனை ஒன்று நடந்து செல்வத்தையும், அதற்கு பின்னால் இரண்டு வாத்துகள் நடந்து செல்வத்தையும் காண முடிகிறது. பிறகு நன்றாக பார்க்கும்போது தான் பூனையை, வாத்து பின்தொடர்வது தெரிகின்றது. பூனை இரண்டடி முன்னோக்கி நகர அந்த வாத்துக்களும் பூனையை உளவு பார்ப்பது போல நகர்கிறது, பூனை திரும்பி பார்த்தால் அந்த வாத்துகள் ஒன்றும் அறியாதவை போல அப்பாவியாக நின்றுகொள்கின்றன. இப்படியே போய்க்கொண்டிருக்க திடீரென பொறுமையிழந்த பூனை அந்த இரண்டு வாத்துக்களையும் நோக்கி சீறி பாய்கிறது. உடனே அந்த வாத்துகள் பயந்து பின்னால் ஓடுகிறது, அதன் பின்னர் பூனை சுதாரித்துக்கொண்டு ஓடுகிறது அதனை துரத்திக்கொண்டு வாத்துகளும் பின்னாடியே ஓடுவதுடன் இந்த வீடியோ நிறைவடைகிறது.
மேலும் படிக்க | பாம்புக்கு முரட்டுத்தனமா காதல் வந்தா என்ன ஆகும்? வீடியோ வைரல் ஆகும்!!
இந்த வீடியோ பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கின்றது, இணையத்தில் ஆகஸ்ட்-4ம் தேதி பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் இந்த வீடியோவிற்கு இருபதாயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகளும், பல கமெண்டுகளும் பதிவிடப்பட்டு வருகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ