ஒரு கிராமத்தில் கோபமடைந்த இரண்டு பாம்புகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டு வீட்டின் படுக்கைக்கு அடியில் சிக்கியதைக் கண்டு அந்த குடும்பம் உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பர்வீன் கஸ்வான் என்ற இந்திய வன அதிகாரி இந்த வீடியோவை ஆன்லைனில் பகிர்ந்துள்ளார். பாம்புகள் படுக்கைக்கு அடியில் சிக்கிக்கொண்டு, நெளிந்தை பார்த்து பயந்த குடும்ப உறுப்பினர்கள் நடு இரவில் உதவிக்கு வன துறையை அழைத்தனர். வனத்துறையினர் வந்து பாம்புகளை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர். இந்த அசாதாரண நிகழ்வை காண ஏராளமான கிராம மக்கள் வந்து தங்களது செல்போனில் படம் பிடித்து சென்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தடவிக்கொடுக்க வந்தவரை தாவிப்பிடித்த பெண் சிங்கம்!! பதைபதைக்க வைக்கும் வைரல் வீடியோ..


"நேற்று இரவு, எங்கள் உதவியாளர் ஒருவருக்கு இந்த கிராமத்தில் இருந்து உதவி தேவை என்று அழைப்பு வந்தது. ஒருவரின் வீட்டின் படுக்கையறையில் 'வால்ஸ் கிரெய்' எனப்படும் மிகவும் ஆபத்தான பாம்பு இருப்பதாக கூறினார்கள். இந்த பாம்புகள் மீட்கப்பட்டு பின்னர் பத்திரமாக வன பகுதியில் விடப்பட்டனர்" கஸ்வான் X தளத்தில் பதிவிட்டுள்ளார். வைரலான இந்த வீடியோவில் ஒரு குடும்ப உறுப்பினர் படுக்கையறைக்குள் செல்வதைக் காணலாம், அவர்களின் தொலைபேசியின் லைட் மூலம் வெகு தொலைவில் இருந்து பாம்பை பார்க்கின்றனர். பாம்பு படுக்கைக்கு அடியில் சுழன்று கொண்டிருந்ததால், குடும்பத்தினர் பயந்து வீட்டிற்கு வெளியே தங்கியுள்ளனர்.



செவ்வாயன்று பகிரப்பட்ட இந்த வீடியோ இதுவரை 200 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. பாம்புகளை மீட்டு கிராம மக்களை காதுகாத்ததற்காக வன துறையினர் மேற்கொண்ட முயற்சிக்கு மக்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர். பாம்புகள் சண்டையிடுவதை விட இனச்சேர்க்கை செய்திருக்கலாம் என்று சிலர் ஊகித்தனர். ஒரு பயனர் வன துறையை பாராட்டி பதிவிட்டு இருந்தார். "வன துறைக்கு பாராட்டுக்கள், சரியான நேரத்தில் அனைவரையும் காப்பாற்ற உதவி உள்ளீர்கள்" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர் "பாதுகாப்பான மீட்பு மற்றும் விடுவிக்கப்பட்டதற்கு நன்றி" என்று தெரிவித்தார். "இந்த அழகான அப்பாவி உயிரினத்தை பாதுகாப்பாக விடுவித்ததற்காக முழு குழுவிற்கும் நன்றி" என்று இன்னொரு பயனர் கூறினார்.


பாம்புகளைப் புண்படுத்துவதற்குப் பதிலாக அவர்களுக்கு உதவிய குடும்பத்திற்கு சிலர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். "பாம்புகள் ஆபத்தானவை மற்றும் பயமுறுத்தக்கூடியவை என்றாலும், அவை அழகான உயிரினங்கள். முன்பு சிலர் செய்தது போல் பாம்புகளுக்கு தீங்கு விளைவிக்காமல் இப்போது அந்த குடும்பம் பாம்புகளை மீட்க உதவுவது நல்லது. விலங்குகள் மற்றும் இயற்கையைப் பராமரிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அதிகமான மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர் என்பதை இது காட்டுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க | 12வது மாடியில் குதிக்க பார்த்த இளைஞர்!! திக் திக் வைரல் வீடியோ..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ