வைரல் செய்திகள்: "இயற்கை நம் அழகியல், அறிவார்ந்த, அறிவாற்றல் மற்றும் ஆன்மீக திருப்திக்கு முக்கியமானது" என்று அமெரிக்க உயிரியலாளர் ஈ.ஓ. வில்சன் கூறுகிறார். இயற்கையின் சில பரிசுகள் ஆச்சரியத்திற்குக் குறைவானதல்ல. அதனால்தான் எல்லோரும் இயற்கையுடன் மீண்டும் இணைந்திருக்க வலியுறுத்துகிறார்கள். ஏனென்றால், இயற்கை நம் முன்னால் எப்போது எந்த அதிசயத்தைக் கொண்டு வரும் என யாருக்கும் தெரியாது. உதாரணமாக, வண்ணமயமான இலை பூச்சிகளைக் காட்டும் இந்த வைரல் வீடியோவை எடுத்துக் கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேச்சர் இஸ் லிட்ஃபயர் @NaturelsLit என்ற ட்விட்டர் ஹேண்டில் கொண்ட ஒருவர், தனது உள்ளங்கையில் ஊர்ந்து செல்லும் சில இலை பூச்சிகளின் ஒரு குறுகிய கிளிப்பைப் பகிர்ந்துள்ளார். இது நெட்டிசன்களை உற்சாகப்படுத்தியது. அவர்களில் ஒருவர், "சாலட் சாப்பிடும் போது இவற்றில் ஒன்று நகரத் தொடங்குகிறது" என்று கற்பனை செய்து பாருங்கள்." என்று கமென்ட் செய்துள்ளார். சிலர் இதை வேடிக்கையாக எடுத்துக்கொண்டாலும், சிலருக்கு இது வினோதமாக இருந்தது. சிலருக்கு இந்த இலை பூச்சிகள் அச்சத்தைக் கொடுத்தன.


ஆனால் இந்த இலை பூச்சிகள் எப்படிப்பட்டவை? 17 ஆண்டுகளில் அமெரிக்காவில் முதல் முறையாக சிக்காடாஸ் காணப்பட்டன! அவை ஆபத்தானவையா என்பதையும், ஏலியன்களைப் போல் நடக்கும் இந்தப் பூச்சிகளைப் பற்றி அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.


பிரிட்டானிக்காவின் கூற்றுப்படி, “இலை பூச்சி, (family Phylliidae) மற்றும் நடக்கும் இலை (walking leaf) என்றும் அழைக்கப்படுகிறது. 50-க்கும் மேற்பட்ட இனங்கள் தட்டையான, பொதுவாக பச்சை பூச்சிகள் (ஆர்டர் பாஸ்மிடா, அல்லது பாஸ்மடோடியா) இலை போன்ற தோற்றத்திற்கு பெயர் பெற்றவை. இலை பூச்சிகள் தாவரங்களுக்கு உணவளிக்கின்றன மற்றும் பொதுவாக அடர்த்தியான தாவரங்களில் வாழ்கின்றன. அவற்றின் இயற்கையான வரம்பு இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுகளிலிருந்து, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளிலும், மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா வரையிலும் பரவியுள்ளது. 


இப்போது, இந்த உயிரினங்களைப் பற்றிய சில அடிப்படை விஷயங்களை நாம் அறிந்த பின்னர், அவற்றைப் பற்றி இன்னும் சில சுவாரஸ்யமான உண்மைகளைப் பார்ப்போம்.


இலை பூச்சிகள் ஒரு இலையின் தோற்றத்தை எடுக்க உருமறைப்பைப் பயன்படுத்துகின்றன. வேட்டையாடும் மிருகங்கள் இவற்றை பலமுறை உண்மையான இலைகளாகக் கருதுகின்றன. இவ்வகையில் இந்தப் பூச்சிகள் அவற்றை குழப்பி விடுகின்றன. இவை மிகவும் புத்திசாலிகள்!!


உருமறைப்பு போதுமானதாக இல்லாவிட்டால், இந்த இலை பூச்சிகள் காற்றால் வீசப்படும் ஒரு உண்மையான இலை போலவே, முன்னும் பின்னுமாக ஆடிக்கொண்டு நடக்கின்றன. அட்டகாசம்!!


இந்தப் பூச்சிகள், இளமையாக இருக்கும்போது, நிம்ஃப்கள் என அழைக்கப்படுகின்றன, அவை சிவப்பு நிறத்தில் இருக்கும். அவை இலைகளையும் தாவரங்களையும் சாப்பிடத் துவங்கும்போதுதான், அவை பச்சை நிறமாக மாறும்.


இந்தப் பூச்சிகள், சுத்தமான சைவ உணவை உண்ணும் சைவப் பூச்சிகள் என்பதை இங்கே கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். இந்த இலை பூச்சிகளில்  50 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.


இலை பூச்சிகள் குச்சி பூச்சிகளுடன் தொடர்புடையவை. இவை நடைக் குச்சிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை ஆர்டர் பாஸ்மடோடியாவில் ஒன்றாக செல்லும்.


இந்த இயற்கையின் மகிழ்ச்சிகரமான உயிரினங்களைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்களைக் கண்டோம். இந்த சிறிய, பல கால்களையுடைய தவழும்-ஊர்ந்து செல்லும் பூச்சி நண்பர்களால் ஈர்க்கப்பட்டு விட்டோம் என்றே சொல்லலாம். மற்ற பூச்சிகள் போல, இவை நம்மை அச்சுறுத்துவதில்லை.


(மொழியாக்கம்: லீமா ரோஸ்)