இந்தியாவில் சக்கை போடு போட்ட எஸ்.எஸ்.ராஜமௌலியின் RRR தற்போது உலக அளவிலும் வெற்றி பெற்று வருகிறது. அமெரிக்காவைத் தொடர்ந்து, இப்போது ஜப்பானிலும் RRR படம், அக்டோபர் 21 அன்று வெளியாகிறது. படத்தை விளம்பரப்படுத்த ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர், மற்றும் ராம் சரண் ஆகியோர் ஜப்பானில் முகாமிட்டுள்ளன நிலையி, படத்தின் சூப்பர் ஹிட் பாடலான 'நாட்டு நாட்டு' பாடல் ஏற்கனவே அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபமாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், இப்போது, ​​பிரபல ஜப்பானிய யூடியூபர் மயோ, தனது புதிய வீடியோவில் சூப்பர் ஹிட் பாடலுக்கு நடனமாடி பட்டையை கிளப்பியுள்ளார். ராஜமௌலி, ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரை நேர்காணல் செய்த யூடியூபர் அதன் பின் "நாட்டு நாட்டு"  படாலுக்கு தான் நடனமாடும் வீடியோ வெளியிட்டார். வீடியோவைப் பகிர்ந்த அவர், “ஜப்பானில் RRR வெளியீட்டிற்காக  ராஜமௌலி, ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரை நேர்காணல் கண்ட பிறகு, நாங்கள் மிகவும் உற்சாகமாகி, வீடு திரும்பும் வழியில் பாட்டிற்கு நடனமாடினோம்” என பதிவிட்டுள்ளார். 'ஆர்ஆர்ஆர்' குழு யூடியூபர்களுடன் இணைந்து போஸ் கொடுக்கும் புகைப்படத்தையும் ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட, மயோ தனது நண்பர் ககேடகுவுடன் நடனமாடுவது வீடியோவில்  காணலாம்.


 



 


ஆஸ்கர் விருதை முன்னிட்டு ராஜமௌலி தனது படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.  திரைப்பட தயாரிப்பாளர் கடந்த மாதம் அமெரிக்காவில் தனது படத்தை விளம்பரப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டார். இப்போது ஜப்பானில் இரண்டு முன்னணி நடிகர்களுடன் இணைந்து  படத்தை விளம்பரப்படுத்துகிறார்.


மேலும் படிக்க | சர்தார் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!​


அவர் ஜப்பானில் வீடியோ கேம் படைப்பாளரான ஹிடியோ கோஜிமாவைச் சந்தித்தார், மேலும் கோஜிமா புரொடக்ஷன்ஸ் ஸ்டுடியோவுக்குச் சென்ன்று, அங்கு அவர் 3D படங்களை உருவாக்கப் பயன்படும் பாடி ஸ்கேனரில் அமர்ந்து படங்களை எடுத்துக் கொண்டார். 'Everything Everywhere All At Once' இயக்குனர் டேனியல் குவான் சமீபத்தில் 'ஆர்ஆர்ஆர்' படத்தைப் பார்த்து, படத்தையும் தயாரிப்பாளரையும் மிகவும் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | விஜய் பட தந்தையின் வைரல் வீடியோ - விமானத்தில் பெண்ணிடம் செய்த சேட்டையை பாருங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ