இணையத்தை கலக்கும் நடிகர் விஜய் குழந்தையை கொஞ்சும் வீடியோ காட்சி.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

AR முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'சர்கார்'. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 


துப்பாக்கி, கத்தி திரைப்படத்திற்கு அடுத்து மூன்றாவது முறையாக நடிகர் விஜய் மற்றும் AR முருகதாஸ் இப்படத்தில் இணைந்துள்ளனர். நடிகர் விஜய்-ன் 62-வது திரைப்படமான இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் சர்கார் படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்களையும் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் வெளியாகும் சர்கார் தொடர்பான போஸ்டர்கள் அன்றைய நாளின் ட்ரெண்டிங்கில் இடம்பிடிப்பது மறுக்கமுடியாத உண்மை.


இந்நிலையில், நேற்று சர்கார் படத்தின் தெலுங்கு டீசர் வெளியானது. அதைத் தொடர்ந்து சர்கார் படம் போலந்து நாட்டில் வெளியாக இருப்பதாக செய்தி வெளிவந்தது. இதையடுத்து தற்போது விஜய் குழந்தை ஒன்றை கொஞ்சி மகிழும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 


அந்த வீடியோவில் நடிகர் விஜய், ஒரு குழந்தையை தாது மடியில் வைத்து அந்த குழந்தை திணறுவதை போன்று அவரும் சத்தமிட்டு குழந்தையை கொஞ்சும் காட்சி அனைவரையும் ஈர்த்துள்ளது. அந்த வீடியோ தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.