Watch Video: 144 தளங்களைக் கொண்ட கட்டிடம் 10 விநாடிகளில் தகர்க்கப்பட்டு கின்னஸ் சாதனை
1972 இல் திறந்து வைக்கப்பட்ட மீனா சயீத் அபுதாபியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய துறைமுகமாக இயங்கி வருகிறது.
கடந்த மாதம், அபுதாபியின் மீனா சயீத் பகுதியில் உள்ள பிரபலமான மீனா பிளாசா கோபுரங்களின் 144 தளங்கள் 10 வினாடிகளில் வெற்றிகரமாக இடிக்கப்பட்டன. பிளாசாவின் ஒரு பகுதியாக இருந்த 165 மீட்டர் உயர கோபுரத்தை இடித்தது, ‘வெடிபொருட்களைப் பயன்படுத்தி (கட்டுப்படுத்தப்பட்ட இடிப்பு) இடிக்கப்பட்ட மிக உயரமான கட்டிடம்’ என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது.
6000 கிலோ பிளாஸ்டிக் வெடிபொருட்கள் மற்றும் டெட்டனேட்டர் தண்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி இக்கட்டிடம் இடிக்கப்பட்டது. இது தனிப்பட்ட முறையில் திட்டமிடப்பட்ட 18,000 டெட்டனேட்டர்களைப் பயன்படுத்தி வெடிக்கப்பட்டது என்று வளைகுடா செய்தி, செய்தி வெளியிட்டுள்ளது.
மீனா பிளாசா டவர்ஸைத் தகர்ப்பது, மீனா சயீத்தின் மறுவடிவமைப்புக்கான மெகா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டுப்படுத்தப்பட்ட தகர்ப்பு, துறைமுக பகுதியில் ஒரு பெரிய சுற்றுலா தலத்திற்கு வழிவகுக்கும்.
1972 இல் திறந்து வைக்கப்பட்ட மீனா சயீத் அபுதாபியில் (Abu Dhabi) 40 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய துறைமுகமாக இயங்கி வருகிறது.
வீடியோவை இங்கே பாருங்கள்:
கட்டிட இடிப்பு பணிகள் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.
"நாங்கள் பிளாஸ்டிக் வெடிபொருட்களைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம், அவை மிகவும் பாதுகாப்பானவை என்பதாகும். மேலும் குறிப்பிட்ட மின்சார சமிக்ஞைகள் மூலம் மட்டுமே இதை வெடிக்கச்செய்ய முடியும். இந்த வெடிபொருட்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) வந்ததிலிருந்து சிவில் பாதுகாப்பு மற்றும் அபுதாபி காவல்துறையினரின் காவலில் இருந்தன” என்று ஓரேகன் கூறினார்.
ALSO READ: 1 hour-க்குள் 33 dishes செய்து 10 வயது கேரளப் பெண் செய்த சுவையான சாதனை!!
கூடுதலாக, வெடிப்பின் விளைவுகளைத் தணிக்கவும், இதனால் ஏற்படும் தூசி மேகங்களைக் கட்டுப்படுத்தவும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அபுதாபியின் ஊடக அலுவலகமும் இடிப்பு அறிக்கையை இடிபட்ட சிறிது நேரத்திலேயே தனது ட்விட்டர் பக்கத்தில் வெற்றிகரமாக வெளியிட்டது.
கின்னஸ் உலக ரெக்கார்ட்சின் (Guinness World Record) உத்தியோகபூர்வ நீதிபதி டேனி ஹிக்சன், “ சாதனை படைக்கும் செயல்களின் உலகளாவிய அதிகாரியாக, இந்த கட்டுப்படுத்தப்பட்ட இடிப்புக்கு சாட்சியம் அளித்து, இது இதன் வகையில் மிகப்பெரியது என்று சான்றளிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த சாதனை அபுதாபியின் புதிய துடிப்பான கட்டுமான முன்னேற்றங்கள் மற்றும் வடிவமைப்புகளுக்கான புதிய தொடக்கத்தை ஊக்குவிக்கிறது.” என்று கூறினார்.
"இந்த அளவுள்ள ஒரு கட்டமைப்பை இடிப்பதற்கு மிகவும் திறமையான நிபுணத்துவம் தேவை. இதற்கான திறமையும் நிபுணத்துவமும் ஒரு சிலரிடம் மட்டுமே உள்ளது. இந்த செயலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அவர்களின் பாதுகாப்பான மற்றும் தொழில்முறை பணிகளுக்காக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேம்.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ALSO READ: அனுமன் கோயிலுக்கு நிலத்தை நன்கொடையாக அளித்த இஸ்லாமியர்: இணையத்தில் இதயங்களை வெல்கிறார்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR