உலகையே கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து, பலரை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது.  கொரோனாவை கட்டுப்படுத்த அரசு, கட்டுப்பாடுகளையும், ஊரடங்கு போன்ற உத்தரவுகளையும் அமல்படுத்தியிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது மக்கள் பலியாவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியாகும். ஆனால், கர்நாடகாவில் மக்கள் கொரோனா பரவலை தடுக்கும் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு, ‘தெய்வீக குதிரையின்’ இறுதிச் சடங்கில் கலந்துக் கொண்டார்கள்.


நூற்றுக்கணக்கான மக்கள் குதிரையின் இறுதிச் சடங்கில் கலந்துக் கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  இதுபோல் மக்கள் கூட்டம் கூடினால், அதில் கலந்துக் கொண்டவர்களில் எத்தனை பேருக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டியிருக்கும் என்ற கவலைகள் எழுகின்றன.



கர்நாடகா மாநிலத்தில் பெலகாவி மாவட்டத்தில் கொன்னூருக்கு அருகிலுள்ள மரதிமத் (Maradimat)  கிராமத்தில் உள்ள கடசிதேஷ்வர் ஆசிரமத்தில் (Kadasiddeshwar ashram) இருந்த குதிரை, ‘தெய்வீக குதிரை’ என்று கருதப்பட்டது. 


இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா?  கோவிட் -19 தொற்றுநோயிலிருந்து உலகத்தை விரட்டும்படி ஸ்ரீ கடசிதேஷ்வரக் கடவுளிடம் பிரார்த்தனை செய்துக் கொண்டு அதற்காக கடவுளுக்கு நேர்ந்து விடப்பட்ட குதிரை இது. 


Also Read | History Today May 25: நாசாவின் ரோபோ பீனிக்ஸ் செவ்வாய் கிரகத்தில் இறங்கிய சரித்திர நாள்


 உலகில் இருந்து கொரோனாவை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், தெய்வத்திற்கு நேர்ந்துவிடப்பட்டதால், இந்த குதிரை தெய்வீக குதிரையாக கருதப்படுகிறது. கடசிதேஷ்வர பகவானுக்கு நேர்ந்துவிடப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு குதிரை இறந்தது.


கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் குதிரையின் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கான மக்கள்  கலந்துக் கொண்டனர். கோவிட் -19 கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறி மக்கள் கும்பலாகச் செல்லும் வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது. 


இந்த சம்பவம் கிட்டத்தட்ட 400 வீடுகளைக் கொண்ட மரதிமத் (Maradimat) என்ற குக்கிராமம் ஒன்றில் நடைபெற்றது. இந்த சம்பவத்தின் காட்சிகள் வைரலாகி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்தவுடன், கிராமம் சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் ஆராயும் என்றும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறினார்.


Also Read | RowdyBaby சூப்பர் ஹிட் கொடுத்த பிரபுதேவா-தனுஷ் மீண்டும் இணைகிறார்களா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR