`மெல்ல மெல்ல வரலாற்றில் காணாமல் போவோம்” : ஆப்கான் பெண்ணின் உருக்கமான வீடியோ
ஆப்கானிஸ்தானில் நிலைமை குறித்த ஒரு பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானை விட்டு தப்பி வெளியேறும் மக்களில் பெண்கள் யாரும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காபூல்: ஆப்கானிஸ்தானை தாலிபான் கைப்பற்றிய பிறகு, அங்கு கொந்தளிப்பான நிலை காணப்படுகிறது. ஆப்கான் நாட்டவர்கள், தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு பயந்து அங்கிருந்து தப்பியோடி வருகின்றனர். நாட்டில் இருந்து தப்பியோடும் படங்களில் ஆண்கள் மட்டுமே காணப்படுகின்றனர். அந்த மக்கள் கூட்டத்தில் பெண்கள் இல்லை. அப்படியானால், ஆப்கான் நாட்டில் உள்ள பெண்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் (Afghanistan) நிலைமை குறித்த ஒரு பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த பெண் ஆப்கான் மக்களின் வலியை கூறியுள்ளார். உலகம் ஆப்கானிஸ்தான் மக்களை பற்றி கவலைப்படவில்லை என்று கூறும் அவர், சில நாடுகள் தலிபான் ஆட்சிக்கு ஆதரவான நிலைப்பட்டை எடுத்துள்ளனர் என மிகவும் வருந்தி அழுவது மனதை உருக்குவதாக உள்ளது.
ALSO READ | Afghanistan Update: 800 பேரை ஏற்றிக்கொண்டு ஆப்கானிலிருந்து பறந்த விமானத்தின் புகைப்படம்
காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, எப்படியாவது நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கிறார்கள். இந்த போராட்டத்தில், பறக்கும் விமானத்தில் இருந்து விழுந்து சிலரின் மரணம் பற்றிய செய்திகளும், அது தொடர்பான் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. இதே போன்று வைரலாகி வரும் பெண்ணின் வீடியோவில் அவர் ஆப்கான் மக்களின் வலியை விவரித்துள்ளார்.
வைரலான வீடியோவில், அந்த பெண் தனது வலியை ஆப்கானி மொழியில் வெளிப்படுத்துகிறார். நாங்கள் ஆப்கானிஸ்தானில் பிறந்ததால், எங்களை பற்றி அக்கரை கொள்வார் யாரும் இல்லை என்று கூறி அழுகிறாள். எங்களை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை என்று அந்தப் பெண் கூறுவதைக் காணலாம். நாங்கள் வரலாற்றில் மெதுவாக மெதுவாக காணாமல் போவோம் என அவர் அழுவது மனதை உருக்குவதாக உள்ளது.
இந்த 45 வினாடி வீடியோவில், இந்த நேரத்தில் ஆப்கானிஸ்தான் மக்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை அந்த பெண் விவரித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாவலாசிரியர் காலிட் ஹொசைனி தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட வீடியோவை, இதுவரை 20 லடத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். தலிபான்கள் காபூலைக் கைப்பற்றியதால், ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற துடிக்கும் மக்கள் கூட்டம், விமான நிலையத்தின் அலை மோதியதால், விமான நிலையம், மிக நெரிசலான பேருந்து நிலையம் போல் காணப்பட்டது.
ஆனால், மறுபுறம், ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு பாகிஸ்தான் உட்பட சில நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. இதில் சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகியவை அடங்கும். இந்த நாடுகள் தலிபான் ஆட்சி நிரந்தரமாக இருக்கும் என்று நம்புகிறது. அதே நேரத்தில், அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், தென்கொரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் தூதரகங்களை மூடி, தங்கள் குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற முயற்சித்து வருகின்றன.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR