Afghan Taliban Rule: ஆப்கானில் தாலிபான் ஆட்சி தொடங்கியது, அதிபர் நாட்டை விட்டு வெளியேறினார்

 ஆப்கானிஸ்தான் தாலிபன்களிடம் தலைவணங்கிவிட்டது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 15, 2021, 10:11 PM IST
  • ஆப்கன் அதிபர் நாட்டை விட்டு வெளியேறினார்
  • தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றினார்கள்
  • ஆப்கனில் இருந்து மக்களையும் அதிகாரிகளையும் வெளியேற்றும் பணியை இந்தியா தொடங்கியது
Afghan Taliban Rule: ஆப்கானில் தாலிபான் ஆட்சி தொடங்கியது, அதிபர் நாட்டை விட்டு வெளியேறினார் title=

காபூல்: ஆப்கானிஸ்தான் தாலிபன்களிடம் தலைவணங்கிவிட்டது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

1996 மற்றும் 2001 க்கு இடையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்றது. மிகவும் மோசமான காலகட்டமாக அது இருந்தது. தற்போது தாலிபன்களின் கை ஓங்கிய நிலையில், அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கானி நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

சில காலங்களுக்கு முன்பு தலிபானுக்கும் ஜனாதிபதியுக்கும் இடையே அதிகாரத்தை ஒப்படைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக செய்திகள் வந்தன. சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானியும், துணை அதிபர் அம்ருல்லா சாலே (Amrullah Saleh)வும் நாட்டை விட்டு தஜிகிஸ்தானுக்கு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்தியா உட்பட பல நாடுகள் தங்கள் குடிமக்கள் மற்றும் தூதர்களை திரும்ப அழைத்துக் கொள்ளும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. மறுபுறம், தலைநகர் காபூலில் இரவு 9 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படவில்லை.

அரசாங்கம் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்' என்று தலிபான் (Taliban) செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் கூறியிருந்தார், அது நடந்தது. 

ALSO READ | ஆப்கானை விட்டு வெளியேறும் தலைவர்கள்; காபூலை சுற்றி வளைத்த தாலிபான்கள்

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 15, 2021) அதிபர் இல்லத்தில் அதிகாரத்தை ஒப்படைக்கும் செயல்முறைக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான் சகாப்தம் மீண்டும் தொடங்கிவிட்டது.  அலி அகமது ஜலாலி (Ali Ahmed Jalali) ஆப்கானிஸ்தானின் அடுத்த அதிபராக இருக்கலாம் என்று பரவலாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் அறிவிக்கலாம்.

தலிபான்கள் தலைநகரில் உள்ள கலகன், கராபாக் மற்றும் பாக்மான் (Kalakan, Karabagh and Paghman) ஆகிய மாவட்டங்களில் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்கப் படைகளின் விமானப் படையின் ஆதரவு அதிபருக்கு இருந்தபோதிலும், நாட்டை கைப்பற்றிய தாலிபன்கள், ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகளை விரட்டியடித்தனர்.

இது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கா, தனது ராணுவ பயிற்சிக்காக பில்லியன் கணக்கான டாலர்கள் செலவழித்த போதிலும் பாதுகாப்பு படையினரின் நிலை எப்படி தலைகீழானது என்ற கேள்வி எழும்புகிறது. சில நாட்களுக்கு முன்பு, தலிபான்கள் ஆப்கன் தலைநகர் காபூலை ஒரு மாதத்திற்குள் கைப்பற்றுவார்கள் என அமெரிக்க ராணுவம் கணித்திருந்தது.

ALSO READ | Afghanistan: 90 நாட்களில், தாலிபான் வசமாகும் என எச்சரிக்கும் அமெரிக்க உளவுத் துறை

காபூலில் இருந்து தனது நூற்றுக்கணக்கான அதிகாரிகள் மற்றும் குடிமக்களை வெளியேற்ற இந்தியா துரிதமாக செயல்படுகிறது. தலைநகர் காபூலில் தலிபான்கள் நுழைந்த செய்தி வந்த பிறகு, மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. காபூலில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் 129 பயணிகளை ஏற்றிச் சென்றது. காபூலில் உள்ள இந்திய தூதரகத்தின் ஊழியர்கள் மற்றும் இந்திய குடிமக்களின் உயிரை அரசாங்கம் காப்பாற்றுவதில் மும்முரமாக உள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து 129 இந்திய பயணிகளுடன்  ஏர் இந்தியா விமானம் டெல்லி வந்தடைந்தது. காபூலில் இருந்து 129 பயணிகளுடன் மாலை 6 மணிக்கு புறப்பட்ட விமானம், 8 மணிக்கு டெல்லியில் பத்திரமாக தரையிறங்கியது.

நிலைமையைக் கருத்தில் கொண்டு, இந்திய விமானப்படை  விமானம் சி -17  (IAF's C-17) குளோப்மாஸ்டர் மக்கள் மற்றும் ஊழியர்களை வெளியேற்ற தயாராக வைக்கப்பட்டுள்ளது. தலிபான் போராளிகள் நகரத்தின் புறநகர்ப் பகுதிக்குள் நுழைந்து, அங்கு வாழும் மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி வருவதாக வரும் தகவல்கள் கவலையளிக்கின்றன.

ALSO READ | தாலிபான் வசமானதா ஆப்கானிஸ்தான்; ஆப்கான் அரசு கூறுவது என்ன..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News