காபூல்: ஆப்கானிஸ்தானில் வரலாறு காணாத மாற்றங்கள் நிக்ழந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நகரமாக ஆக்கிரமித்த தாலிபான்கள் தலைவகரையும் கைப்பற்றி நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தனர். இதற்கிடையில், ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி (Ashraf Ghani) நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.
தற்போது தாலிபான் தலைமைக்கு அதிகாரத்தை மாற்றுவது குறித்து அங்கு நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனுடன், ஆப்கானிஸ்தான் மக்களிடையே அச்சமும் அதிகரித்து வருகிறது.
தாலிபான்களிடமிருந்து தப்பிக்க மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்
90-களில் தாலிபான் ஆட்சி இருந்தபோது அனுபவித்த கொடுமைகளை ஆப்கானிஸ்தான் மக்கள் மறக்கவில்லை. அதனால்தான் தாலிபான் கைகளில் முழுமையாக அதிகாரம் செல்வதற்கு முன்பு அவர்கள் எப்படியாவது நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறார்கள்.
காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து மக்கள் கூட்டம் காணப்படுகின்றது. ஆப்கானிஸ்தான் (Afghanistan) மக்களின் நிலையை விவரிக்கும் ஒரு படம் சமீபத்தில் வைரலானது. இதில் பேருந்தில் தொங்கிக்கொண்டு பயணிப்பது போல, பறக்கத் தொடங்கிய விமானத்தில் தொங்கிய மூன்று பேர் உயரத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தனர். இந்த காட்சி உலகெங்கிலும் உள்ள மக்களை பதபதைக்க வைத்துள்ளது.
விமானத்திற்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது
இப்போது அதே விமானத்தின் உள்ளே எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்தால், ஆப்கானிஸ்தானின் கொடூரத்தையும் அங்கிருந்து வெளியேற மக்கள் காட்டும் அவசரத்தையும் எளிதில் யூகிக்க முடிகிறது.
"The Crew Made the Decision to Go:" Inside Reach 871, A US C-17 Packed With 640 Afghans Trying to Escape the Taliban | @TaraCopp and @MarcusReports https://t.co/lf3LajxzzX pic.twitter.com/6wg82LtfRc
— Defense One (@DefenseOne) August 16, 2021
ALSO READ: இவர்தான் ஆப்கானிஸ்தானின் அடுத்த அதிபரா? யார் அந்த அப்துல் கானி பராதர்?
டிஃபென்ஸ் ஒன் (Defense One) இணையதளம் வெளியிட்ட புகைப்படம் வைரல் ஆகியுள்ளது. இந்த படம் அமெரிக்க விமானப்படையின் சி -17 குளோப்மாஸ்டரின் (C-17 Globemaster) உள்ளே எடுக்கப்பட்ட படத்தைக் காட்டுகிறது. ஊடக அறிக்கையின்படி, இந்த விமானத்தில் 134 பேர் அமரும் இருக்கைகள் உள்ளன. இருப்பினும், விமான நிலையத்தில் விமானத்தின் கேட் திறந்தவுடன். 800 பேர் அதில் நிரப்பப்பட்டனர். உள்ளே நுழைந்த மக்கள் எந்த காரணத்துக்காகவும் வெளியே வரத் தயாராக இல்லை. தாங்கள் ஆப்கானிஸ்தானிலேயே இருந்தால் தாலிபான்கள் (Taliban) தங்களைக் கொன்றுவிடுவார்கள் என்று அவர்கள் அஞ்சுவது அப்பட்டமாகத் தெரிந்தது.
800 பேரை ஒன்றாக ஏற்றிக்கொண்டு பறந்தது விமானம்
இறுதியில், விமானத்தின் குழுவினர் ஒரு துணிச்சலான முடிவை எடுத்தனர். அவர்கள் 800 பேருடன் விமானத்தை (சி -17 குளோப்மாஸ்டர்) எடுக்க முடிவு செய்தனர். அனைவருக்கும் இடம் கிடைக்கும் வகையில் விமான இருக்கைகள் அகற்றப்பட்டன. அதன் பிறகு மக்கள் விமானத்தின் தரையில் அமர்ந்தனர்.
அதிகாரிகள் கூறுகையில், விமானத்தில் இருந்த 800 பேரில் 650 பேர் ஆப்கான் குடிமக்கள் என்று தெரிவித்தனர். அந்த மக்கள் பாதுகாப்பாக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது தொடர்பாக அமெரிக்க விமானப்படையில் இருந்து எந்த முறையான அறிக்கையும் வரவில்லை. இவ்வளவு அதிக மக்களை இப்படிப்பட்ட ஒரு சூழலில் ஒரு விமானம் ஏற்றிக்கொண்டு சென்றது இது முதல் நிகழ்வாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.
ALSO READ:ஆப்கானிஸ்தானை கட்டமைப்பது எங்கள் வேலை அல்ல: ஜோ பைடன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR