திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். சாப்பாடு  இல்லைன்னாக் கூட இருந்துடுவான்... செல்போன் இல்லைனா செத்துருவான் போல இருக்கு’ - என்று . இது மிகைப்படுத்திச் சொல்லப்பட்டதாக இருந்தாலும் கூட, இதில் சிறிதளவு உண்மை உள்ளதோ என தோன்றுகிறது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைரைலாகி வரும் இந்த வீடியோவை  பார்த்தால் செல்போன்  என்ற இந்தக் கையடக்கக் கருவி நம்மை அடிமைபடுத்தி விட்டது என்று தான் கூறத் தோன்றும். அதனால் வரும் ஆபத்தும் அளவிலாதது. 


மொபைலை பார்த்துக் கொண்டே பிளாட்பாரத்தில் இருந்து தவறி டிராக்கில் விழுந்த நபரை CISF வீரர் காப்பாற்றிய  வீடியோ ஒன்று வைரலாகி  (Social Media)  வருகிறது. 


டெல்லியில் உள்ள ஷாத்ரா மெட்ரோ ரயில் நிலையத்தில் மொபைலை பார்த்துக் கொண்டே வந்த நபர் பிளாட்பாரத்தில் இருந்து தவறி தண்டவாளத்தில் தவறி விழுந்த பயணி ஷைலேந்திர மேத்தாவை CISF கான்ஸ்டபிள் ரோஹ்தாஸ் தண்டவாளத்தில் ஏற்றி விடுகிறார். மொபைல் போனில் மூழ்கி விட்ட அவருக்கு பிளாட்பாரத்தின் நுனியை அடைந்தது கூட தெரியவில்லை. அந்த அளவிற்கு மொபைல் மோகம்.


ALSO READ | Viral Video: ‘சிங்கத்தை சீண்டினால் என்ன ஆகும்’; சிங்கம் பாடம் புகட்டும் வைரல் வீடியோ!


வீடியோவை இங்கே பாருங்கள்:



ரயில் வரவிருந்த நிலையில், பிளாட்பார்மின் மற்றொரு பக்கம் இருந்த CISF வீரர் அந்த நபரைக் காப்பாற்றினார். அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் ரயில் தண்டவாளத்தில் வரவில்லை. இல்லை என்றால் என்ன ஆகியிருக்கும் என நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. மெட்ரோ ரயில்கள் ஒவ்வொரு 1-2 நிமிடத்திற்கும் வரும் நிலையில், சில வினாடிகள் தாமதம் ஆகி இருந்திருந்தால், பயணி மெட்ரோவில் அடிபட்டு உயிர் இழந்திருக்கலாம். எனவே மக்கள் கவனமாக இருக்க வேண்டும். 


ALSO READ | Viral Video: என்ன ஒரு கம்பீர நடை; இதுவல்லவோ அசல் ‘பாயும் புலி’!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR